Connect with us

கூலி தொழிலாளி To டாப் ஹீரோ… நடிகர் சூரி கடந்து வந்த பாதை தெரியுமா…?

CINEMA

கூலி தொழிலாளி To டாப் ஹீரோ… நடிகர் சூரி கடந்து வந்த பாதை தெரியுமா…?

தமிழ் சினிமாவில் பின்னணியில் கூட்டத்தோடு கூட்டமாக தோன்றி மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்து சிறிய கதாபாத்திரம், நகைச்சுவை கதாபாத்திரம், துணை கதாபாத்திரம் என்று டாப் ஹீரோ என்ற அந்தஸ்துக்கு உயர்ந்து இருப்பவர் நடிகர் சூரி. ஆனால் இந்த இடத்திற்கு அவர் எளிதாக வந்துவிடவில்லை. ஒருவேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டு இருந்தவர் நடிகர் சூரி. அப்படி இன்று எல்லோரும் வியந்து பார்க்கும் சூரியின் கடந்து வந்த பாதை என்ன என்பதை இனி காண்போம்.

மதுரையில் பிறந்து வளர்ந்தவர் சூரி. இவரது இயற்பெயர் ராமலட்சுமணன் முத்துசாமி என்பதாகும். சிறு வயதிலிருந்தே சினிமாவின் மீது அதீத ஆர்வம் கொண்டிருந்தார் சூரி. தளபதி திரைப்படத்தில் ரஜினியின் கதாபாத்திரத்தை பார்த்து தன் பெயரை சூரி என்று மாற்றி வைத்துக் கொண்டார். 1996 ஆம் ஆண்டு சினிமாவில் எப்படியேனும் நுழைந்து சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு மதுரையில் இருந்து சென்னைக்கு குடி பெயர்ந்தார் சூரி.

   

   

ஆனால் எதிர்பார்த்த அளவு அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. சாப்பாட்டுக்கே வழியில்லாத சூரி வாய்ப்பு தேடிக்கொண்டே கிடைத்த வேலைகளை எல்லாம் செய்து வந்துள்ளார். ஹோட்டல்களிலும் துணி கடைகளிலும் துப்புரவு தொழிலாளியாகவும் பணியாற்றி இருக்கிறார். 1998 இல் சினிமாவில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் தோன்றிய சூரி சின்னத்திரை தொடர்களிலும் ஒரு சில காட்சிகளில் தோன்றினார். 2009 ஆம் ஆண்டு வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் பரோட்டா சாப்பிடும் போட்டியில் தோன்றியதன் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அன்றிலிருந்து அவர் பரோட்டா சூரி என்றே அழைக்கப்பட்டார். இந்த திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக சினிமாவில் அமைந்தது.

 

அடுத்ததாக 2012 ஆம் ஆண்டு சுந்தரபாண்டியன் திரைப்படத்தில் சசிகுமாருக்கு நண்பராக துணை கதாபாத்திரத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்தார். இதன் மூலம் சற்று பிரபலமானார் சூரி. அடுத்ததாக சிவகார்த்திகேயனுடன் இணைந்து வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தனக்கென சினிமாவில் ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டார் சூரி. தொடர்ந்து பாண்டியநாடு, ஜில்லா, ரஜினி முருகன், இது நம்ம ஆளு, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், சீம ராஜா, சாமி ஸ்கொயர், நம்ம வீட்டு பிள்ளை, சங்க தமிழன் என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் நடித்து நகைச்சுவை நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றார் சூரி.

சூரியன் நடிப்பு திறமையை பார்த்த இயக்குனர் வெற்றிமாறன் அவரை நாயகனாக்கி பார்க்க வேண்டும் என்று விரும்பி 2023 ஆம் ஆண்டு விடுதலை பாகம் 1 திரைப்படத்தில் நாயகனாக அறிமுகப்படுத்தி வைத்தார். நாயகனாக அறிமுகமான முதல் படத்திலேயே தனது அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார் சூரி. தற்போது இந்த திரைப்படத்தின் பாகம் 2 வெளியாக இருக்கிறது. அடுத்ததாக கருடன். கொட்டுக்காளி என அடுத்தடுத்து வெற்றி படங்களில் நடித்து வருகிறார் சூரி. மெல்ல மெல்ல நாயகனாக பொறுமையாக நிதானமாக அடி எடுத்து வைக்கிறார் சூரி.

தற்போது அனைவரும் விரும்பும் நாயகனாக வலம்வரும் சூரி அடுத்தடுத்து பெரிய இயக்குனர்களின் படத்தில் கமிட் ஆகி பிஸியாக இருந்து வருகிறார். இருந்தாலும் மேடைகளில் அவருடைய தன்னடக்கமான பேச்சு அனைவரையும் ஈர்க்கும் விதமாகவே இருக்கிறது. ஒருவேளை சாப்பாட்டிற்கே கஷ்டப்பட்ட ஒரு சாதாரண கிராமத்தில் இருந்து வந்த ஒரு மனிதன் தனது உழைப்பினாலும் விடாமுயற்சியினாலும் இன்று டாப் ஹீரோவாக மாறி இருக்கிறார் சூரி.

More in CINEMA

To Top