CINEMA
பாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் வாழை.. உலகளவில் 4 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா..?
முன்னணி இயக்குனரான மாரி செல்வராஜ் இயக்கத்தில் ரிலீசான பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் ஆகிய படங்கள் சூப்பர் ஹிட் ஆனது. கடந்த 23-ஆம் தேதி மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான வாழை திரைப்படம் ரிலீஸ் ஆகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. திரை பிரபலங்கள் அரசியல் தலைவர்கள் என ஏராளமானோர் வாழை திரைப்படத்தை பாராட்டி வருகின்றனர்.
முன்னதாக வாழை திரைப்படத்திலிருந்து பாடல்கள் ரிலீஸ் ஆகி மக்கள் மனதை வென்றது. வாழை திரைப்படத்தில் கலையரசன், திவ்யா துரைசாமி, நிகிலா விமல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வாழை திரைப்படத்தை பார்த்து இயக்குனர் பாலா, சூரி ஆகியோர் சொல்ல வார்த்தைகள் இல்லாமல் மாரி செல்வராஜுக்கு முத்தம் கொடுத்து தங்களது பாராட்டை தெரிவித்து சென்றனர். ஆரம்பத்தில் இருந்து படத்தின் மீது மக்களுக்கு நல்ல அபிப்பிராயம் இருந்தது.
இதே போல கூழாங்கல் பட இயக்குனர் பி.எஸ் வினோத் ராஜ் இயக்கத்தில் சூரி ஹீரோவாக நடித்த கொட்டுக்காளி திரைப்படம் கடந்த 23-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. கொட்டுக்காளி திரைப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார். இந்த படத்தில் அன்னா பென் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பெர்லின் உள்ளிட்ட பல நாடுகளில் கொட்டுக்காளி திரைப்படம் திரையிடப்பட்டு பல விருதுகளை வென்றுள்ளது.
இந்த நிலையில் கடந்த 4 நாட்களில் உலக அளவில் கோட்டுகாளி திரைப்படம் 1.35 கோடி ரூபாய் வசூல் செய்த நிலையில் வாழை திரைப்படம் 4 நாட்களில் 12 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் பட்டையை கிளப்புகிறது.