சூரியின் கிராமத்து ஆக்சன்.. ஹீரோவாக கலக்கினாரா..? சொதப்பினாரா..? கருடன் படத்தின் ட்விட்டர் விமர்சனம் இதோ..!

By Mahalakshmi on மே 31, 2024

Spread the love

துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி ஹீரோவாக நடித்துள்ள கருடன் திரைப்படத்தின் ட்விட்டர் விமர்சனம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. சிவகார்த்திகேயன் நடித்த எதிர்நீச்சல் என்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் துரை செந்தில்குமார். அதற்கு முன்னதாக வெற்றிமாறன் அவர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார்.

   

முதல் படத்திலேயே பிளாக்பஸ்டர் வெற்றியை கொடுத்த துரைசெந்தில் குமார் அதனை தொடர்ந்து காக்கி சட்டை, கொடி, பட்டாஸ் உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கியிருக்கின்றார். சுமார் 5 ஆண்டு இடைவெளிக்கு பிறகு மீண்டும் அவர் இயக்கிய திரைப்படம் தான் கருடன்.

   

சூரி கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருடன் சசிகுமார், உன்னி முகுந்தன், பிரகிடா, ரோஷினி உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் நடித்திருந்தது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கின்றார். இன்று இப்படம் திரையரங்களில் வெளியாகிய வைரலாகி வருகின்றது. இந்நிலையில் கருடன் படத்தின் ட்விட்டர் விமர்சனம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

 

அதை இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். சூரி மற்றும் சசிகுமாரின் நடிப்பு சூப்பராக இருந்தது. உன்னி முகுந்தன் காட்சிகள் இன்னும் வலுவாக இருந்திருக்கலாம். பழைய கதையாக இருந்தாலும் சிறப்பாக திரைக்கதை அமைத்திருக்கின்றார். துரை செந்தில்குமார் அழுத்தமான விறுவிறுப்பான கிராமத்து ஆக்சன் டிராமாவாக கருடன் படம் இருந்தது என்று பதிவிட்டு இருக்கின்றனர்.

மேலும் சிலர் கருடன் திருப்திகரமான கிராமத்து படமாக இருந்தது. ஒவ்வொரு கேரக்டர்களும் மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருந்தது. மூன்று நண்பர்களுக்கு இடையேயான நட்பு, பகை, ஈகோ தான் இந்த திரைப்படம். சூரியின் நடிப்பு மிகவும் சூப்பர். சசிகுமாரின் தேர்வு சரியானதாக இருந்தது.

ஷிவதாவின் ரோலும் அருமையாக இருந்தது என்று குறிப்பிட்டு இருக்கின்றன. கருடன் விறுவிறுப்பான திரைக்கதை மற்றும் எமோஷன் அடங்கிய சிறந்த கிராமத்து ஆக்சன் படம். சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தன் ஆகியோருக்கு சரியான வேடம். கிளைமாக்ஸ்-இல் சூரியன் சம்பவம் வெறித்தனமாக இருந்தது என்று பதிவிட்டு இருக்கின்றனர்.