தன்னை தூக்கிவிட்ட சசிகுமாரை மேடையில் அவமானப்படுத்திய சூரி.. பின்னணியை பகிர்ந்த பயில்வான்..

By vinoth on மே 31, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி விடுதலை திரைப்படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமாக இருக்கிறார் நடிகர் சூரி. தன்னுடைய எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த சூரி தொடர்ந்து பல திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். ஹீரோவாக மட்டுமல்லாமல் நகைச்சுவை கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவர் ஹீரோவாக நடித்துள்ள இரண்டாவது படமான கருடன் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தில் அவரது நட்புக்காக இயக்குனரும் நடிகருமான சசிகுமார் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர்கள் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி மற்றும் வெற்றிமாறன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

   

விழாவில் பேசிய சூரி, சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் சேதுபதியை ஆஹோ ஓஹோவென புகழ்ந்து பேசினார். ஆனால் தன்னை மதித்து தனக்காக தன் படத்தில் கௌரவ வேடத்தில் நடித்துக் கொடுத்த சசிகுமாரை அவர் கண்டுகொள்ளவே இல்லை. சசிகுமார், சூரிக்கு இப்போது மட்டும் இந்த உதவியை செய்யவில்லை. அவர் வளர்ந்து வரும காலத்திலேயே அவருக்கு தன் படங்களில் தொடர்ந்து வாய்ப்புகள் கொடுத்து தூக்கிவிட்டவர்.

   

அதே போல தன் படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியில் சூரியை உள்ளே விடாத போது அவரை அழைத்து சென்று முன்வரிசையில் உட்காரவைத்தவர் சசிகுமார். அப்படிப் பட்டவரை வைத்துக் கொண்டு அவரைப் பற்றி ஒரு வார்த்தைக் கூட பேசாமல் இருந்துள்ளார் சூரி. அது மட்டுமில்லாமல் தனக்கு மிகப்பெரிய பிரேக் ஆக அமைந்த வெண்ணிலா கபடி குழு திரைப்பட இயக்குனர் சுசீந்தரன் பற்றியும் ஒன்றும் பேசாமல் வெற்றிமாறனையே புகழ்ந்து கொண்டிருந்தார்.

 

இந்த இரண்டு நபர்களைப் பற்றி எதுவும் பேசாமல் சூரி மௌனம் காத்தது ரசிகர்களுக்கே அவர் மேல் சிறு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது சம்மந்தமாக பத்திரிக்கையாளர்கள் பிஸ்மி மற்றும் பயில்வான் ரங்கநாதன் ஆகியோர் சுட்டிக் காட்டி பேசியுள்ளனர்.