கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் ரிலீஸாகி, வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படத்துக்கான பிரமோ நிகழ்ச்சி ஒன்றில் கார்த்திக் சுப்புராஜ், நடிகர்கள் ராகவா லாரன்ஸ், எஸ்ஜே சூர்யா ஆகியோர் பங்கேற்றனர். அப்போது முதல் காதல் அனுபவம் குறித்த கேள்விக்கு எஸ்ஜே சூர்யா கூறியதாவது, என்னுடைய அன்பே ஆருயிரே படத்தை பார்த்தாலே, எனது காதலை பற்றி தெரிந்துக்கொள்ளலாம். அப்படித்தான் பல காட்சிகளை, என் வாழ்க்கையில் இருந்து எடுத்து வைத்திருந்தேன். காதல் என்பது ஒரு பொசசனிவ்ஸ்ட் நேச்சர்தான். டூமச் ஆப் லவ்தான். அதை காதலில் ஜீரணம் பண்ணிக்கறது ரொம்பவும் சிரமமாக விஷயம்.

லவ் இருக்குதா, இல்லையான்னு ஒரு கட்டத்துல அவங்களுக்கு சந்தேகம் வரும். நம்மகிட்ட எந்த கேள்வியுமே கேட்கறது இல்லையே, லவ் இல்லையோ அப்படின்னு தோணும். அப்புறம் கேள்வி கேட்டா, ரொம்ப கேள்வி கேட்டு தொல்லை பண்றானேன்னு தோணும். லவ்வுல பிளணை்ட் மைன்ட் செட்தான் ரெண்டு சைடுமே இருக்கும். ஒரு நாள் கேர்ள் பிரண்டோட நைட் டின்னர் போலாமுன்னு முடிவு பண்ணி, ரெஸ்டாரெண்டுல டேபிள் ரிசர்வ் பண்ணிட்டேன். அதுக்கு அப்புறம் ஒரு பெரிய புரடியூசர் கூப்பிட்டு நைட் நேர்ல வாங்க, புராஜெக்ட் பத்தி பேசலாமுன்னு கூப்பிட்டார். வேற வழியில்ல, இரண்டுமே முக்கியமான விஷயம். டின்னருக்கு போகலைன்னா, கேர்ள்பிரண்ட் கோவிச்சுக்குவா, வேற ஒரு நாள் போலாமுன்னு சொல்ல முடியாது. அதனால, எட்டு மணிக்கு போயிட்டு எட்டரை மணிக்கு எஸ்கேப் ஆயிடலாமுன்னு நான் பிளான் பண்ணீட்டேன், நைட் எட்டு மணிக்கு ரெஸ்டாரெண்ட் போனோம்.

அங்க ஆர்டர் பண்ணுன புட் வர்றதுக்கே, எட்டரை மணி ஆயிடுச்சு. புரடியூசர் ஒருத்தர் கூப்பிடறார். நான் கண்டிப்பா போகனுமுன்னு சொல்லீட்டு, எப்படி வேகமாக சாப்பிடறேன் பாரு,ன்னு சொல்லிட்டு, அவசரமா சாப்பிட்டு டின்னரை முடிச்சிட்டு அங்கிருந்து கிளம்பி விட்டேன். அவளும் சாப்பிடாமல் டென்சனில் போய்விட்டாள். நைட் 12 மணிக்கு வீட்டுக்கு திரும்பி வந்தேன். காலிங் பெல் அடிச்சா, கதவு திறக்கலை. இது ஒண்ணும் சத்திரம் இல்லே, நெனைச்ச நேரத்துல வர்றதுக்கு, என்றார். சரி நான் போறேன், போறேன் என்று கோபமாக அங்கிருந்து கிளம்புவதுபோல, படிக்கட்டுல வேகமாக ஓடுவது போல சத்தம் செய்துவிட்டு, திரும்ப போய் கதவுகிட்ட குனிஞ்சு உட்கார்ந்துட்டேன். அவ, நான் போயிட்டேன்னான்னு பார்க்க கதவை திறந்தப்போ, காலுக்கு அடியில் புகுந்து வீட்டுக்குள்ள போயிட்டேன், என்று கூறியிருக்கிறார் எஸ்ஜே சூர்யா.
