#image_title
தமிழ் சினிமாவின் தற்போது பயங்கர பிசியான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் எஸ் ஜே சூர்யா. நடிகர் அஜித்துக்கு ‘வாலி’ மற்றும் விஜய்க்கு ‘குஷி’ என இரண்டு முன்னணி ஹீரோக்களுக்கும் ஹிட் படங்களை கொடுத்து அவர்களை இயக்குனராக தூக்கிவிட்டவர் எஸ்.ஜே.சூர்யா. இதைத்தொடர்ந்து நியூ, அ ஆ, இசை போன்ற திரைப்படங்களை தானே இயக்கி நடித்தார். ஆனால், இத்திரைப்படங்கள் பெரிதளவில் வரவேற்பை பெறவில்லை.
இதைத்தொடர்ந்து நடிகராக அவதாரமெடுத்த இவர், விஜய் நடித்த ‘மெர்சல் ‘படத்தில் வில்லனாக நடித்து தன்னை ஒரு சிறந்த நடிகராக நிரூபித்தார். மேலும் சிம்பு நடித்த ‘மாநாடு’ திரைப்படத்திலும் தனது மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். மாநாடு படத்தின் வெற்றிக்கே அவர்தான் காரணம் என பலரும் கூறும் அளவுக்கு அவரின் நடிப்பு அசத்தலாக இருந்தது.
#image_title
இதைத்தொடர்ந்து சமீபத்தில் விஷால், எஸ் ஜே சூர்யாவின் கூட்டணியில் உருவான மார்க் ஆண்டனி திரைப்படம் இவரை ஒரு நடிப்பு அரக்கனாக இந்த உலகத்துக்கே காட்டியுள்ளது. வெற்றி படத்தை கொடுக்க கொடுக்க அவரது சம்பளமும் ஏறிக்கொண்டே வருகிறது.
தற்போது நடிகர் எஸ் சூர்யா ஒரு படத்துக்கு சுமார் ரூ 8 கோடியிலிருந்து 10 கோடி வரை சம்பளமாக வாங்குகிறாராம். மேலும் கிட்டத்தட்ட 6 படங்களுக்கு மேல் தற்பொழுது கைவசம் வைத்திருப்பதாகவும், யாராவது அவரிடம் சென்று கதை சொல்லப்போனால் 2024 புல் ஆகிடுச்சு. 2025க்கு வாங்க என்று வாசலுடன் அனுப்பி வைத்து விடுகிறாராம்.
கான்பூரைச் சேர்ந்த 45 வயதான சசி ரஞ்சன் மிஸ்ரா என்பவர், தனது 11 வயது இரட்டைப் பெண் குழந்தைகளை கொடூரமாகக்…
பீகாரில் நடந்த இந்த கொடூரமான சம்பவம் மனிதநேயமற்ற செயலின் உச்சமாக அமைந்துள்ளது. வெறும் 12 வயதே ஆன சன்னி என்ற…
லூதியானாவில் சினிமா பாணியில் நடந்த கார் திருட்டுச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் சமீபகாலமாக கார்…
மயிலாப்பூர் திமுக வேட்பாளர் த.வேலுவின் நேர்முக உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை…
கல்வித் தகுதியும், கைநிறையச் சம்பளமும் ஒரு மனிதனின் சமூக அந்தஸ்தை உயர்த்திவிடலாம், ஆனால் அவை அந்த மனிதனின் சிந்தனைப் போக்கை…
கேரள மாநிலம் திருச்சூர் அருகே நள்ளிரவில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த 8 வயது சிறுவன் ஆல்ஜோ, பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம்…