தமிழ் சினிமாவில் மார்கண்டேயர் என அழைக்கப்படுவர் நடிகர் சிவக்குமார். எம்ஜிஆர் சிவாஜி படங்களில் அவர்களுடன் நடித்த சீனியர் நடிகர். அவரது பிள்ளைகள் சூர்யா கார்த்தி இருவரும் இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகர்களாக உள்ளனர். கடந்த பல ஆண்டுகளாக சினிமாவில் நடிப்பதை தவிர்த்து வரும் நடிகர் சிவக்குமார் நிறைய பொது நிகழ்ச்சிகளில் இலக்கிய கூட்டங்களில் சினிமா விழாக்களில் பங்கேற்று பேசி வருகிறார்.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சிவக்குமார் கூறியதாவது, என் வெற்றிக்கு பின்னால் என் மனைவி ஒரு முக்கிய காரணம். எனக்கு இப்போ 84 வயசு ஆகுது. அவளுக்கு நான் தேவையில்லை. ஆனால் எனக்கு அவ தேவை. நான் பேசீட்டு இருக்கும்போது திரும்பி பார்த்தா என்ன வேணும்ன்னு கேப்பாள். அவள் எனக்கு இரண்டாவது தாய். மனைவி போன பிறகு ஒரு ஆம்பள 10 வருஷம் வாழ்ந்தால் அது பெரிய விஷயம். மனைவி போனா எல்லாம் போன மாதிரி என்று நடிகர் சிவக்குமார் உருக்கமாக கூறியிருக்கிறார்
