#image_title
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். மெரினா திரைப்படத்தின் மூலம் திரையுலகில் கால் பதித்த இவர், 3, மனம் கொத்தி பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். இவருக்கென தற்பொழுது பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது.
இவர் நடிப்பில் வெளியான மாவீரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து அயலான் திரைப்படம் வரும் பொங்கலுக்கு ரிலீசாகும் என்று கூறப்பட்டுள்ளது. அடுத்ததாக சிவகார்த்திகேயன் கமலஹாசன் தயாரிப்பில் உருவாகும் எஸ்கே 21 படத்தில் நடித்து வருகிறார்.
இத்திரைப்படத்தை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ளதும் குறிப்பிடத்தக்கது. நடிகர் சிவகார்த்திகேயன் ஜோடியாக சாய் பல்லவி ஹீரோயினாக நடிக்கிறார். சமீபத்தில் இத்திரைப்படத்தின் ஷூட்டிங் காஷ்மீரில் நடைபெற்று முடிந்தது. இதை தொடர்ந்து ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இத்திரைப்படம் குறித்த எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலும் இன்னும் வெளிவரவில்லை.
இந்நிலையில் ‘அயலான்’ பட ப்ரொமோஷனில் அஜித்துடன் இணைய விருப்பம் தெரிவித்திருந்தார் சிவகார்த்திகேயன். அதாவது அஜித்துடன் பைக் டூர் செல்ல ஆசைப்படுவதாக கூறியிருந்தார். சமீபத்தில் இயக்குநர் ஹெச் வினோத், மஞ்சு வாரியர், நடிகர் அஜித் மூவரும் இணைந்து பைக் டூர் சென்றிருந்தனர். அதேபோல் சிவகார்த்திகேயனும் அஜித்துடன் பைக் டூர் செல்ல ஆசைப்படுவதாக கூறியிருந்தார்.
சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘தலைவர் 171’ படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார் என கூறப்பட்ட நிலையில், ஆனால் அப்படி எதுவும் தனக்கு அழைப்பு வரவில்லை என அயலான் இசை வெளியீட்டு விழாவில் கூறியிருந்தார். இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனின் அஜித்துடன் இணைந்து செல்ல வேண்டும் இந்த விருப்பம் தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.
டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…
ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…
ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…