அமரன் வெற்றியைத் தொடர்ந்து செம பிசியான சிவகார்த்திகேயன்.. கைவசம் இத்தனை படங்கள் வச்சிருக்காரா..?

By Nanthini on கார்த்திகை 9, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் முன்னணி நடிகராக இருப்பவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். மிமிக்ரி ஆர்டிஸ்டாக தனது பயணத்தை தொடங்கிய இவ்வாறு தற்போது முன்னணி நடிகர்களின் பட்டியலில் இடம் பிடிக்கும் அளவிற்கு வளர்ந்து நிற்கிறார். இவருடைய நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு வெளியான திரைப்படம் தான் அமரன். நம் நாட்டிற்காக வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்த இந்த திரைப்படத்தை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருந்தார். கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்து இருந்த நிலையில் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்திருந்தார்.

Amaran: 'சிவகார்த்திகேயன் பிடித்திருக்கும் துப்பாக்கி அவரின் உழைப்புக்கான  பரிசு!' - Rise Of SK | Rise Of Sivakarthikeyan - Vikatan

   

இந்த திரைப்படம் வெளியாகி ஒன்பது நாட்களில் உலக அளவில் 200 கோடி வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்துள்ளது. சிவகார்த்திகேயன் நடித்த திரைப்படங்களிலேயே அதிக வசூல் செய்த திரைப்படம் அமரன் தான். இந்த நிலையில் அமரன் வெற்றியை தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயன் தனது கைவசம் ஏகப்பட்ட திரைப்படங்களை வைத்துள்ளார். அதாவது ஏற்கனவே ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் எஸ் கே 23 என்ற திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகின்றார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஏறத்தாழ முடிவடைந்து விட்டது.

   

Sivakarthikeyan Next Movie : மீண்டும் இணையும் "DON கூட்டணி".. ஸ்கிரிப்ட்  பணிகளை முடித்த சிபி - SKவிற்கு ஜோடியாகும் தளபதியின் நாயகி?

 

இதனைத் தொடர்ந்து அடுத்ததாக டான் திரைப்பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் SK 24 என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார். அடுத்ததாக சுதா கொங்கரா இயக்கத்தில் புறநானூறு என்ற திரைப்படத்தில் நடிப்பதற்கு சிவகார்த்திகேயன் தமிழ் ஆகியுள்ளார். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்றாலும் சமீபத்தில் ஜிவி பிரகாஷ் புறநானூறு திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதை உறுதி செய்து இருந்தார். அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் கமிட்டாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

முதல் தோல்வியை உணர்ந்தபோது நிம்மதி அடைந்தேன்” - சிவகார்த்திகேயன் பகிர்வு |  actor sivakarthikeyan shared his first loss movie experience at mumbai -  hindutamil.in

இது மட்டும் இல்லாமல் நடிகர் சிவகார்த்திகேயன் பார்க்கிங் திரைப்பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஒரு திரைப்படத்திலும், ஹெச். வினோத் இயக்கத்தில் ஒரு திரைப்படத்திலும், குட் நைட் திரைப்படத்தின் இயக்குனர் விநாயகர் சந்திரசேகர் இயக்கத்தில் ஒரு திரைப்படத்திலும் நடிப்பதற்கு பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகின்றது. தொடர்ந்த சினிமாவில் யாரத்தாள ஒரு டஜன் திரைப்படங்களை கையில் வைத்துக்கொண்டு பிஸியாக நடித்து வருகின்றார் சிவகார்த்திகேயன். அமரன் திரைப்படத்தின் வெற்றி தற்போது சிவகார்த்திகேயனை ஒரு முன்னணி இடத்திற்கு கொண்டு சென்றுள்ளது. இதனால் ஒவ்வொரு கதைகளையும் கவனமாக தேர்வு செய்து சிவகார்த்திகேயன் நடித்து வருகின்றார்.