#image_title
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஆங்கராக தனது பயணத்தை தொடங்கினார். தனது கடின உழைப்பால் சின்ன திரையில் இருந்து வெள்ளித்திரையில் நுழைந்தார். இவர் தமிழில் ‘மெரினா’ திரைப்படத்தின் மூலம் வெள்ளி திரையில் கால் பதித்தார். முதல் படமே இவருக்கு ஒரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.
#image_title
அடுத்ததாக வெளியான ‘எதிர்நீச்சல்’ திரைப்படம் இவருக்கு ஒரு திருப்புனையாக அமைந்தது என்றே கூறலாம். இதைத் தொடர்ந்து டாக்டர், டான் என இவர் நடிப்பில் வெளியான அனைத்து திரைப்படங்களும் ஹிட் அடித்தது. அடுத்ததாக இவர் நடிப்பில் வெளியான பிரின்ஸ் திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
இவர் நடிப்பில் இறுதியாக வெளியான ‘மாவீரன்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து வரும் பொங்கலுக்கு ‘அயலான்’ திரைப்படம் ரிலீஸாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படம் சயின்ஸ் பிக்சன் கதைகளத்தை கொண்டது. நடிகர் சிவகார்த்திகேயன் ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு ஆராதனா மற்றும் குகன் என்று இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த அயலான் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சிவகார்த்திகேயனின் மனைவி ஆர்த்தி மகள் ஆராதனாவுடன் கலந்து கொண்டார். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்பொழுது இணையத்தில் வெளியாகி படுவைரலாகி வருகிறது.
தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது கட்சி நிர்வாகிகளுக்கு விடுத்துள்ள அதிரடி எச்சரிக்கை அரசியல்…
பாகிஸ்தான் தொடர்ந்து தூண்டிவிடும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், 1960-ம் ஆண்டு கையெழுத்தான சிந்து நதி நீர்…
கனடா கனவுத் தேசமாகத் தெரிந்தாலும், அங்கு நிலவும் எதார்த்த சூழல் பல இந்திய இளைஞர்களைத் திக்குமுக்காடச் செய்துள்ளது. இதற்குச் சான்றாக,…
மதுரை மத்திய தொகுதியில் நிலவும் உட்கட்சி பூசல் மற்றும் தேர்தல் கள நிலவரங்கள் குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் நடிகை குஷ்பு…
உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில், தான் உயிரோடு இருப்பதை நிரூபிக்க முதியவர் ஒருவர் பிணம் போல நடித்து நூதனப்…
பெலகாவியில் உள்ள ஜோதி நகரில் வசித்து வந்த 28 வயதான ஸ்ரீநிதி என்ற இளம் தாய், வரதட்சணை கொடுமை மற்றும்…