#image_title
நடிகர் அஜீத்குமார் இப்போது நடித்து வரும் படம் விடாமுயற்சி. துணிவு படத்துக்கு பிறகு இந்த படத்தை துவங்க அஜீத்குமாருக்கு நீண்ட இடைவெளி ஏற்பட்டது. கடந்த அக்டோபர் மாதம் 4ம் தேதி மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜீத்குமார் நடிப்பில் அஜர்பைஜானில் விடாமுயற்சி படப்பிடிப்பு துவங்கியது. தொடர்ந்து அஜர்பைஜானில் படப்பிடிப்பு நடந்து வந்தது. வரும் பிப்ரவரி மாதம் இறுதி வரை படப்பிடிப்பை தொடர்ந்து நடத்த படக்குழு முடிவு செய்திருந்த நிலையில், இப்போது ஷூட்டிங் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. விடாமுயற்சி படக்குழுவினர் நாளை காலை சென்னை திரும்புகின்றனர். நடிகர் அஜீத்குமார் படக்குழுவினருடன் சென்னை திரும்புவாரா, அல்லது துபாயில் உள்ள அவரது சொந்த வீட்டுக்கு செல்வாரா என்பது இன்னும் முடிவாகவில்லையாம்.
விடாமுயற்சி படக்குழு தப்பித்தோம், பிழைத்தோம் என சென்னை திரும்ப முக்கிய காரணம், அஜர்பைஜானில் கடுமையான குளிர் நீடிக்கிறது. பனிப்பொழிவு மிகவும் அதிகமாக உள்ளது. சூறாவளி காற்று பலமாக வீசி வருகிறது. ஷூட்டிங் ஸ்பாட்டில் சூறாவளி காற்றால் படப்பிடிப்பு கருவிகள், குறிப்பாக பல லட்சம் ரூபாய் மதிப்பிலான படம்பிடிக்கும் கேமராக்கள் சேதமடையும் நிலை ஏற்பட்டது.. இயற்கை சீற்றத்தை சமாளிக்க முடியாமல் விடாமுயற்சி படக்குழு, தப்பித்தால் போதும் என்ற மனநிலையில் சென்னை திரும்ப முடிவு செய்துவிட்டது.
நாளை சென்னை திரும்பும் படக்குழு, ஜனவரி 7ம் தேதிக்கு பிறகு மீண்டும் அஜர்பைஜான் சென்று படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கியதே மிக மிக தாமதமாகதான். இப்போது தொடர்ந்து பல விஷயங்களால் படப்பிடிப்பு தாமதித்துக்கொண்டே வருகிறது. அஜீத் பிறந்த நாள் அன்று அதாவது மே 1ம் தேதியன்று விடாமுயற்சி படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இப்படி தொடர்ந்து தடைகள் நீடித்து வருவதால் குறிப்பிட்ட தேதியில் படத்தை ரிலீஸ் செய்ய முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அஜர்பைஜானில் தொடர்ந்து மோசமான சூழல் நீடிப்பதால் அங்கு படப்பிடிப்பு நீடிக்குமா, அல்லது துபாய் என ஷூட்டிங் லோகேஷன்களை மாற்றுவார்களா என வரும் நாட்களில் தெரிந்துவிடும்.
சிம்லாவில் அமைந்துள்ள துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் எதிர்பாராத விதமாகத் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வங்கியில் பணத்தைச் செலுத்துவதற்காக ஒருவர்…
விஜயவாடா கிருஷ்ணலங்கா பகுதியில் உள்ள ராமையா தங்கும் விடுதி அறையில், பைடிசெட்டி எர்ரம்மா என்ற பெண் மர்மமான முறையில் கொலை…
வாரங்கல் நகரின் கரிமாபாத் பகுதியில் பட்டப்பகலில் ஐயப்ப பக்தர்கள் போல் வேடமணிந்து வந்த இருவர், பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து…
நவம்பர் 10-ம் தேதி குருகிராமில், முன்பகை காரணமாக நிதின் என்ற 25 வயது இளைஞர் கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…
பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…