தமிழ்நாட்டில் முதலமைச்சராக விஜய் ஜெயிப்பாரா? – காமெடி நடிகர் சிங்கம்புலி தந்த வினோதமான ரியாக்சன் – இணையத்தில் வைரல்!

By Elango on தை 3, 2026

Spread the love

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருந்த விஜய் இப்போது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். தமிழக வெற்றிக் கழகம்தான் வருகிற சட்டசபை தேர்தலில் முதல்வர் பதவியை பிடிக்கப் போகிறது என்று பலரும் பேசி வருகின்றனர். அதற்கேற்ப பல கட்சிகள் அரசியல்வாதிகள் விஜய் பக்கம் தொடர்ந்து வந்துக்கொண்டு இருக்கின்றனர்.

இந்நிலையில் காமெடி நடிகர் மற்றும் இயக்குனர் சிங்கம்புலி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அங்கிருந்த செய்தியாளர்கள் நடிகர் விஜய் வருகிற தேர்தலில் ஜெயித்து தமிழகத்தின் முதலமைச்சர் ஆவாரா என்று கேள்வி எழுப்பினர். அதற்கு ம் ம் ம் என ஒருவிதமாக ராகமாக இழுத்து பதில் சொல்லாமல் சிங்கம்புலி செய்த கிண்டலான ரியாக்சன் பெரிய அளவில் இப்போது வைரலாகி வருகிறது.