#image_title
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. இவர் தற்பொழுது ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ திரைப்படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை கமலஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கமல் தயாரிப்பில் சிம்பு முதன்முறையாக நடிப்பதால் கண்டிப்பாக தரமான சம்பவம் இருக்கும் என உறுதியாக ரசிகர்கள் நம்புகின்றனர். அது மட்டுமின்றி இந்த கதை ரஜினிக்கு எழுதிய கதை என்பதாலும். ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி என்பதாலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களின் மத்தியில் அதிகரித்துள்ளது.
இந்த படத்துக்காக சிம்பு கடுமையாக உழைத்து வருகிறார் என்றும், இந்த கதைக்காக அவர் மார்ஷியல் உள்ளிட்ட சில கலைகளை கற்றுக் கொண்டார் என்றும் கூறப்படுகிறது. இத்திரைப்படம் முழுவதுமே பாகுபலி திரைப்படத்தை போன்று வரலாற்று படமாக எடுக்க போவதாகவும், சுமார் 100 கோடிக்கும் மேல் பிரம்மாண்ட பொருட்செலவில் இத்திரைப்படம் எடுக்கப்பட உள்ளது.
இந்நிலையில் இந்தப் படத்திற்கு அதிகமான எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. தற்பொழுது இப்படத்தின் மிரட்டலான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் ஆக்கிரமித்துள்ளது. நடிகர் சிம்புவும் இந்த வீடியோவை தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டு பாராட்டு தெரிவித்துள்ளார். மிகவும் பிரம்மாண்டமாக ஹாலிவுட் படத்தை நினைவுப்படுத்தும் வகையில் இந்த வீடியோ வெளியாகி கோலிவுட்டையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. இதோ அந்த வீடியோ…
இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…
உலகக் கோப்பை கால்பந்து 2026 தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 (Round of 16) சுற்றில், நார்வே அணியிடம் 2-1…
ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…
கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…