தொட்டி ஜெயா திரைப்படத்தில் சிம்புவுக்கு பதிலாக முதலில் நடிக்க இருந்த நடிகர் குறித்த தகவலை கலைப்புலி எஸ் தாணு ஒரு பேட்டியில் பகிர்ந்து இருக்கின்றார்.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. இவர் வி துரை இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு தொட்டி ஜெயா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் நடிகர் சிம்புக்கு ஜோடியாக கோபிகா நடித்திருப்பார். மேலும் ஆர்டி ராஜசேகர், பிரதீப் ராபர்ட், சிலோன் மனோகர், லிண்டா உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த திரைப்படத்தில் நடித்திருப்பார்கள்.
இப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரித்திருந்தார். மேலும் இந்த திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். இந்த திரைப்படத்தில் நடிகர் சிம்பு கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார். படம் முழுவதும் சண்டைக் காட்சிகள் இடம்பெற்றிருந்தது. மேலும் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகர் குறித்து இந்த படத்தை தயாரித்த கலைப்புலி எஸ் தானு ஒரு பேட்டியில் பகிர்ந்து இருக்கின்றார். முதலில் இந்த திரைப்படத்தை ஜீவனை வைத்து தான் இயக்கம் இருந்தார்களாம். திருட்டுப் பயலே, மச்சக்காரன், தோட்டா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமான அவரிடம் தான் முதலில் கதையை கூறினார்களாம். அதைத் தொடர்ந்து படத்தின் இயக்குனர் துரை நடிகர் சிம்புவிடமும் இந்த படத்தின் கதையை கூறி இருக்கின்றார்.
சிம்புவுக்கு இந்த படத்தின் கதை மிகப் பிடித்துப் போன காரணத்தினால் நான் தான் நடிப்பேன் என்று கூறிவிட்டாராம். பிறகு பட குழுவினரும் இந்த படத்தில் ஜீவனை விட சிம்பு நடித்தால் நன்றாக இருக்கும் என்று முடிவெடுத்து சிம்புவை வைத்து இப்படத்தை இயக்கி விட்டார்கள். இந்த திரைப்படத்தில் சிம்பு நடிக்க படமும் நல்ல வரவேற்பு பெற்றிருந்தது என்று அவர் தெரிவித்திருந்தார்.