“வடசென்னை 2” படத்தில் நடிகர் சிம்புவா..? சுவாரஸ்யத்தை கூட்டிய இயக்குநர் வெற்றிமாறன்..!!

By Soundarya on ஆனி 30, 2025

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களின் ஒருவரான வெற்றிமாறன் தற்போது சிம்புவை வைத்து ஒரு திரைப்படம் இயக்கி வருகின்றார். இது வட சென்னை திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக இருக்குமோ என்ற கேள்வி தான் தற்போது அனைவரும் மத்தியில் உள்ளது. ஆனால்  வட சென்னை இரண்டாம் பாகத்தை வெற்றிமாறன் தனுஷை வைத்து தான் எடுப்பார் என்று  கூறப்பட்டது. இருந்தாலும் சிம்புவை வைத்து எடுக்கும் படம் வடசென்னை படத்தின் சாயல் போல இருக்கலாம் என்றும் கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய வெற்றிமாறன், “தனுஷ் நடிப்பது தான் வடசென்னை 2 என்றும், தற்போது சிம்பு நடிக்கும் படம் அந்த யூனிவர்சில் வரும். வட சென்னை2 அன்புவின் எழுச்சி தான். அதில் தனுஷ் தான் நடிக்கிறார். ஆனால் சிம்பு படம் அதே காலகட்டத்தில் நடக்கும் கதையாக இருக்கும்.(WorldOfVadachennai) அதே கதாபாத்திரங்கள் இந்த படத்திலும் இடம்பெறும். என்னுடைய அடுத்த படம் சிம்பு ஓட தான். இதற்கும், வடசென்னை படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் ஒரே காலகட்டத்தில் நடக்கும் கதையாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.