#image_title
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. இவர் தற்பொழுது ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ திரைப்படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை கமலஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கமல் தயாரிப்பில் சிம்பு முதன்முறையாக நடிப்பதால் கண்டிப்பாக தரமான சம்பவம் இருக்கும் என உறுதியாக ரசிகர்கள் நம்புகின்றனர். அது மட்டுமின்றி இந்த கதை ரஜினிக்கு எழுதிய கதை என்பதாலும். ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி என்பதாலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களின் மத்தியில் அதிகரித்துள்ளது.
இந்த படத்துக்காக சிம்பு கடுமையாக உழைத்து வருகிறார் என்றும், இந்த கதைக்காக அவர் மார்ஷியல் உள்ளிட்ட சில கலைகளை கற்றுக் கொண்டார் என்றும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இத்திரைப்படத்தில் சல்மான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் திரைப்படம் குறித்து சுவாரசியமான தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
அதன்படி , இத்திரைப்படம் முழுவதுமே பாகுபலி திரைப்படத்தை போன்று வரலாற்று படமாக எடுக்க போவதாகவும், சுமார் 100 கோடிக்கும் மேல் பிரம்மாண்ட பொருட்செலவில் இத்திரைப்படம் எடுக்கப்பட உள்ளதாகவும், தற்பொழுது இத்திரைப்படத்தின் பட வேலைகளை இயக்குனர் வேகமாக பார்த்து வருவதாகவும், வரும் பிப்ரவரியில் ஷூட்டிங் தொடங்க இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது. இதனால் ஒட்டுமொத்த கோலிவுட் திரையுலகமே ‘100 கோடியா? என அதிர்ச்சியில் உள்ளனர்.
இந்தச் சம்பவம் நமக்கு மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. கஷ்டப்பட்டு உருவாக்கிய குடும்பச் சொத்தை ஒருவர் இரக்கமின்றி சேதப்படுத்துவதைப் பார்க்கும்போது…
காதலித்த இளைஞனைத் திருமணம் செய்ய குடும்பத்தினர் மறுத்ததால், ஒரு இளம் பெண் அவனுடன் வீட்டை விட்டு வெளியேறினார். இதையறிந்த அப்பெண்ணின்…
சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சேர்ந்த விஜயராஜா (50) என்பவர் ஃபிரிட்ஜ், மிக்ஸி பழுது பார்க்கும் வேலை செய்து கொண்டு, 'சனீஸ்வர…
திருநெல்வேலி டவுண் அருகிலுள்ள நைனார்குளம் தெருவைச் சேர்ந்தவர் உசேன் பாபு. இவர் தனது வீட்டில் வளர்த்து வரும் செல்லப் பூனை…
உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கரில் காதலின் துயரமான முடிவு அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அஞ்சல் மற்றும் வினய் கௌதம்…
தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் நெலகொண்டபள்ளி மண்டலம் அப்பலநர்சிம்மபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி புசுலூரி சீனிவாச ராவ் (38), சொந்தமாக…