பிரபல இயக்குனர் மணிரத்தினத்திடம் உதவி இயக்குனராக தனது திரை வாழ்க்கையை தொடங்கியவர் நடிகர் சித்தார்த். அதன் பிறகு அவர் நடிகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். சித்தார்த் நடிப்பில் இன்னும் சில தினங்களில் சித்தா என்ற திரைப்படம் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கான பிரமோஷன் வேலைகளில் சித்தார்த் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்.

பழனி உள்ளிட்ட சில இடங்களில் படத்தின் சூட்டிங் 3 மாதங்கள் தொடர்ந்து நடைபெற்றது. கடந்து சில நாட்களுக்கு முன்பு சித்தார்த் உள்பட பட குழுவினர் பழனியில் சாமி தரிசனம் செய்தனர். சித்தா படம் குறித்து சமீபத்தில் நடிகர் கமலஹாசன் சிறப்பான விமர்சனங்களை பதிவு செய்துள்ளார். இந்நிலையில் சாமி தரிசனம் செய்வதற்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய சித்தார்த் இந்த ஆண்டின் மிகச் சிறந்த படங்களில் ஒன்றாக அமையும் என நம்பிக்கை இருக்கிறது.
உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் தான் சித்தா. சித்தப்பா மற்றும் ஒரு பெண் குழந்தைக்கு இடையே உள்ள உறவை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படத்தின் டிரைலர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதனையடுத்து நடிகராக மாறியதால் எந்த இடங்களுக்கு போக முடியவில்லை என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த சித்தார்த் “நடிகராவதற்கு முன்பு நான் சாப்பிட்ட கையேந்தி பவன்களில் சாப்பிடுவது, டிரஸ் எடுப்பது போன்றவற்றையெல்லாம் இப்போதும் செய்ய முடிகிறது.
ஆனால் உதவி இயக்குனராக இருந்தபோது அடிக்கடி ஒயின்ஷாப்புகளுக்கு செல்வேன். ஆனால் இப்போது ஒயின்ஷாப்புகளுக்கு தன்னால் போக முடியவில்லை என்பதுதான் வருத்தம் அளிப்பதாக கூறியுள்ளார். அடுத்ததாக இந்தியன்-2 படத்தில் சித்தார்த் முக்கியமான கேரக்டரில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

