சிம்பு நடித்த தொட்டி ஜெயா போன்ற ஒரு படத்தில் நடிப்பதற்காக 20 வருடங்களாக ஏங்கிக் கொண்டிருக்கிறேன் என நடிகர் சித்தார்த் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தற்போது சித்தார்த் நடிப்பில் 3BHK என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தில் சித்தார்த்துடன் இணைந்து சரத்குமார் மற்றும் தேவயானி போன்ற பலரும் நடித்துள்ள நிலையில் எட்டு தோட்டாக்கள் திரைப்படப் புகழ் ஸ்ரீ கணேஷ் இந்த படத்தை இயக்கியுள்ளார். படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் திரைப்படம் நாளை மறுநாள் வெளியாக உள்ளது.
இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்சிகளில் கலந்து கொண்டு பேசி வரும் சித்தார்த் சமீபத்தில் அளித்த பேட்டியில், தொட்டி ஜெயா படத்தில் சிம்பு நடித்த ரோல் போன்ற கதாபாத்திரத்தில் நடிக்க எனக்கு மிகவும் ஆசை. ஆனால் எனக்கு தாடி வளரவே இல்ல. 20 வருடமாக தொட்டி ஜெயா சிம்பு போல ஒரு ரோடில் நடிக்க தான் நான் இயங்கிக் கொண்டிருக்கின்றேன் என்று சித்தார்த் அந்த பேட்டியில் பேசியுள்ளார். முகவரி திரைப்படத்தை இயக்கிய துரை இயக்கத்தில் சிம்பு நடித்த தொட்டி ஜெயா திரைப்படம் 2005 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அந்தத் திரைப்படம் வெளியான போது சிம்புவுக்கு 23 வயதுதான். அந்த வயதிலேயே அப்படி ஒரு கேங்ஸ்டர் ரோலில் சிம்பு நடித்த அசத்தி இருப்பார்.
சம்பவத்தின்படி, செப்டம்பர் 2 ஆம் தேதி இரவு 10 மணியளவில் அகர்வால் எரிபொருள் நிலையத்திற்கு வந்த கருப்பு நிற ஸ்கார்பியோ…
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது இளம்பெண் ஒருவர், சென்னை வளசரவாக்கம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் மருந்தகத்தில்…
நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியைப் பிரிவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நீடித்து வருகின்றன.…
ஆக்ராவில் ஜாதிய மறுப்பைத் தாண்டி உறவுமுறையில் ஈடுபட்டதாகக் கூறி, 17 வயது சிறுமி அவரது தந்தையாலேயே படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம்…
தமிழகத்தின் நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே உள்ள சக்கரம்பாளையம் சந்திப்பில் நிகழ்ந்த கோர சாலை விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை…
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பிட்டு தபாஹி என்ற 20 வயது கல்லூரி மாணவர், தனது பகுதியில் உள்ள மாசடைந்த ஆஜனார்…