Categories: சினிமா

‘எனக்கு இதனால் மிகவும் வருத்தம்.. பல கோடிகள் நஷ்டம்’…! முதன்முறையாக பெங்களூர் சம்பவம் குறித்து நடிகர் சித்தார்த் ஓபன் டாக்…!

Spread the love

தமிழ் சினிமாவில் ‘பாய்ஸ்’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் சித்தார்த். இவர் நடிகராக மட்டுமல்லாமல் கதையாசிரியர், தயாரிப்பாளர் மற்றும் பாடகர் என பன்முக திறமைகளோடு திரையுலகில் வலம் வந்து கொண்டுள்ளார். தற்பொழுது இவர் கமலஹாசன் நடிப்பில் உருவாகி வரும் ‘இந்தியன்2’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அவ்வப்பொழுது சர்ச்சைகளில் சிக்கும் இவர் திரைப்படங்களில் நடித்து பிரபலமானதை விட சர்ச்சைகளில் சிக்கி பிரபலமானதே அதிகம்.  இந்நிலையில் நடிகர் சித்தார்த் நடிப்பில், அருண்குமார் இயக்கத்தில் உருவான திரைப்படம் ’சித்தா’.

இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிவடைந்து ரிலீஸ்க்கு தயாராக உள்ளது. இந்த நிலையில் படத்தின் ப்ரோமோஷன் வேளைகளில் நடிகர் சித்தார்த் மும்முரமாக இறங்கியுள்ளார். அதன்படி நேற்று இவர் பெங்களூருவில் ‘சித்தா’ படம் தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது திடீரென அரங்குக்குள் நுழைந்த கன்னட அமைப்பினர் தகராறில் ஈடுபட்டு, சித்தார்த் முன்பு சூழ்ந்துகொண்டு முழக்கம் எழுப்பினர். அப்போது அவர்கள், ‘காவிரி நீர் பிரச்சினை தொடர்பாக பந்த் நடந்துகொண்டிருக்கும் நிலையில், இதெல்லாம் தேவையா? உடனே பத்திரிகையாளர் சந்திப்பை நிறுத்துங்கள்’ என்று எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, நன்றி தெரிவித்துக்கொண்டு நடிகர் சித்தார்த் மேடையிலிருந்து இறங்கிச் சென்றார்.

இந்நிகழ்ச்சி குறித்து இணையத்தில் முதன்முறையாக நடிகர் சித்தார்த் மனம் திறந்து பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது, முதன்முறையாக ஒரு தயாரிப்பாளராக, என்னுடைய திரைப்படம் திரையரங்குகளில் வெளிவருவதற்கு முன்பாகவே பலருக்கும் அதை திரையிட்டுக் காட்டினேன். அதேபோல பெங்களூருவிலும் அப்படி ஒரு நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டிருந்தோம். ஆனால், காவிரி போராட்டத்துக்கு மதிப்பளித்து நாங்கள் அனைத்தையும் ரத்து செய்தோம். இதனால் எங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. ஆனால் அதையும் தாண்டி ஒரு நல்ல படத்தைப் பற்றி அங்கிருந்தவர்களுடன் பேச முடியாதது வருத்தம் அளிக்கிறது’ என்று கூறியுள்ளார்.

Begam

Recent Posts

ஐயோ… என்னால துக்கத்தைத் தாங்க முடியல… தற்கொலை பண்ணிக்க தோணுது… பெண் சப்-இன்ஸ்பெக்டரின் கண்ணீர் வீடியோ… மத்தியப் பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்…!!

மத்தியப் பிரதேச மாநிலம் அசோகநகர் மாவட்டத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றும் பூஜா ரகுவன்ஷி, கடுமையான முதுகுத் தண்டுவடம் பாதிப்பு மற்றும்…

13 seconds ago

“என்னை விடுங்க…” புல் அறுக்க சென்ற பெண்… கை,கால்களை பிடித்து அடிக்கும் வாலிபர்கள்… கதறி துடித்த சோகம்… பதற வைக்கும் வீடியோ வைரல்…!!

சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ ஒன்று தற்போது மிக வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…

25 minutes ago

ஐயோ கடவுளே… காது சியாம்ஜி தரிசனம் முடிந்து… திரும்பியபோது நேர்ந்த கோர விபத்து… காவலரின் சகோதரன் உட்பட 6 பேர் பரிதாப பலி… கதற வைக்கும் சோகம்…!!

குடும்பத்தினருடன் காது சியாம்ஜி கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு மெயின்புரி கிஷ்ணி பகுதிக்குத் திரும்பிய பக்தர்கள் ஹரியானா மாநிலம் பால்வால் பகுதியில்…

32 minutes ago

அடச்சீ… குடிக்காதேனு சொன்னது குத்தமா?… பெற்ற தாயைக் காப்பாற்ற முயன்ற… தந்தையின் கழுத்தை அறுத்துக் கொன்ற போதை வெறியன் மகன்… ஆந்திரப் பிரதேசத்தில் உலுக்கிய பகீர் சம்பவம்…!

ஆந்திரப் பிரதேசம் சித்தூர் மாவட்டம் பெனுமூர் மண்டலத்தில் மதுப் பழக்கத்தினால் ஒரு குடும்பத்தில் பெரும் சோகமும் அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது. செங்கரெட்டி…

36 minutes ago

அடப்பாவி… இரவு நேரத்தில் அதிவேகத்தில் பறந்த கார்… பெண் வழக்கறிஞரைத் பலிகொண்ட கொடூரம்… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ… மும்பையை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்…!

மும்பையின் மலாத் மேற்கு பகுதியில் உள்ள மாம்லதார் வாடி சந்திப்பு பகுதியில், கடந்த ஆகஸ்ட் 30 அன்று அதிவேகமாக வந்த…

1 மணத்தியாலம் ago