இவ்ளோ அழகா…?  நடிகர் சிபிராஜின் புது Farm House பாத்தீங்களா…? அவரே வெளியிட்ட  புகைப்படங்கள்…

By Begam on மார்கழி 1, 2023

Spread the love

பிரபல நடிகர் சத்யராஜ் மகன் தான் சிபிராஜ். இவர் தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இடம்பெற்றுள்ளார். இவர் ஹீரோவாக பல திரைப்படங்களிலும் நடித்து வருகின்றார்.

   

அவ்வகையில் கடந்த வருடம் ரங்கா, மாயோன் மற்றும் வட்டம் உள்ளிட்ட மூன்று படங்கள் ரிலீஸ் ஆனது. இதில் மாயோன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால் அதன் இரண்டாம் பாகத்தையும் அறிவித்துள்ளார்.

   

 

அடுத்த வருடம் தீபாவளிக்கு சிபிராஜ் நடிப்பில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இப்படி சினிமாவில் பிஸியாக இருக்கும் சிபிராஜுக்கு ரேவதி என்ற பெண்ணுடன் கடந்த 2008 ஆம் ஆண்டு திருமண நடைபெற்றது.

அதற்கு முன்பாக இருவரும் பத்து வருடம் காதலித்து வந்த நிலையில் 2008 ஆம் ஆண்டு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.தற்போது இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். சிபிராஜ் மகன் தீரன் டேக்வோண்டா எனப்படும் தற்காப்பு கலையை கற்று வருகிறார்.

இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புனேவில் நடைபெற்ற தேசிய அளவிலான இந்த போட்டியில் கலந்து கொண்டார்.அதில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றார். சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகர் சிபிராஜ்.

தற்பொழுது இவர் தான் சொந்தமாக பார்ம் ஹவுஸ் ஒன்றை வாங்கியுள்ளதாக குடும்பத்துடன் அந்த வீட்டில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இதற்கு ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.