தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் கார்த்தி. இவர் திரையுலகில் முதன்முதலில் கால்பதித்த திரைப்படம் தான் பருத்திவீரன். இயக்குனர் அமீர் இயக்கத்தில் வெளிவந்த இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதோடு மட்டுமில்லாமல் வசூல் ரீதியாகவும் சரி விமர்சன ரீதியாகவும் சரி மிகப்பெரிய வெற்றியை தந்தது.

அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் நடிகர் கார்த்திக் மட்டும் இல்லாமல் சரவணன், கஞ்சா கருப்பு, பொன்வண்ணன், பிரியாமணி போன்ற பல்வேறு பிரபலங்கள் நடித்து உள்ளார்கள். பொதுவாக இந்த திரைப்படத்தின் கதை அம்சம் எவ்வளவு சிறந்ததாக அமைந்ததோ அதேபோல இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல்கள் ஒவ்வொன்றும் மிகவும் தரமாகவும் யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் ரசிகர்களை நடனம் ஆட வைக்கும் அளவிற்கு இருந்தது.

2007ல் வெளியான இந்த திரைப்படம் 300 நாட்களை கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியது. அறிமுகமான முதல் படத்திலேயே மிகப்பெரிய வெற்றியை கொடுத்து தனக்கென ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டார். காதல், ஜாதி என பக்கா கிராமத்து பின்னணியில் படம் வெளியாகி மாஸ் வெற்றி கண்டது.

ஆனால் படம் வெளியாகி 16 ஆண்டுகளாகியும் இயக்குனர் அமீர் – தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, இருவரிடையே பணம் தொடர்பான பிரச்சனை நடைபெற்று வருகிறது. நீதிமன்றத்தில் வழக்கும் விசாரணையில் உள்ளது. இந்த சர்ச்சையில் இயக்குனர் அமீருக்கு ஆதரவாக சசிகுமார், சமுத்திரக்கனி, நடிகர் பொண்வண்ணன், நடிகர் சினேகன் , இயக்குனர் பாரதிராஜா என பலரும் ஆதரவு தெரிவித்தனர்.

இதனால் சமீபத்தில் ஞானவேல் ராஜா மன்னிப்பு பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். இப்படி நிலவரமே கலவரமாய் இருந்தாலும் இதுவரை நடிகர் கார்த்தி மற்றும் சூர்யா இருவருமே இந்த சர்ச்சை குறித்து வாய் திறக்கவில்லை. இந்நிலையில் அமீர் மற்றும் அவருக்கு ஆதரவாக பேசுபவர்களுக்கு எதிராக சூர்யா ரசிகர்கள் ஒரு போஸ்டர் ஒட்டி இருக்கின்றனர். சூர்யாவை சிங்கம் என்றும் அமீரை ஆதரிப்பவர்கள் ஓநாய்கள் என்றும் குறிப்பிட்டு அந்த போஸ்டர் ஒட்டி இருக்கின்றனர். இதோ அந்த போஸ்டர்…
Cheap activity by Ameer & co???? pic.twitter.com/Ua00nNtI8A
— NAMAKKAL SFC™ (@sfcNamakkal) November 30, 2023
