தொடர் தோல்விகள்…! விஜய் சேதுபதி, SK-விடமிருந்து நான் கத்துக்கிட்ட விஷயம் இதுதான்…. மனம் திறந்து பேசிய சாந்தனு…!!

By Devi Ramu on புரட்டாதி 23, 2025

Spread the love

அறிமுக இயக்குனரான உன்னி சிவலிங்கம் பல்டி என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் ஷேன் நிகாம், செல்வராகவன், அல்போன்ஸ் புத்திரன் சாந்தனு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு சாய் அபயங்கர் இசை அமைக்கிறார். வருகிற 26-ஆம் தேதி தமிழ் மற்றும் மலையாளத்தில் இந்த திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படம் குறித்த நடிகர் சாந்தனு ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது, நான் எப்போதும் சாந்தனுவாக தான் இருக்கிறேன். சாந்தனு பாக்யராஜாக இல்லை. எனது அப்பாவால் எனக்கு சக்கரகட்டி பட வாய்ப்பு கிடைத்தது. அந்த படம் சரியாக போகவில்லை. இதனால் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வரவில்லை. அதன் பிறகு எனது அப்பாவால் சித்து படம் கிடைத்தது. அடுத்த சில வருடங்களில் ஏதோ தவறு நடப்பதை உணர்ந்தேன். அதற்குள் என்னுடைய மார்க்கெட் போனது. சினிமா துறையில் யாரெல்லாம் வெற்றி பெறுகிறார்கள் என பார்க்க ஆரம்பித்தேன்.

   

விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், மணிகண்டன் அவர்களை கவனிக்க ஆரம்பித்தேன். விஜய் சேதுபதி கூட்டத்தில் ஒருவராக இருப்பார். பின்னர் படிப்படியாக அடிமட்டத்தில் இருந்து உயர்ந்தார். நானும் அடிமட்டத்தில் இருந்து எதையும் கற்றுக் கொள்ளவில்லை. இவர்களை பார்த்து நான் கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன். மக்களோடு தொடர்பு படுத்தக்கூடிய சாமானிய மனிதனின் கதாபாத்திரங்களை தேர்வு செய்ய ஆரம்பித்தேன். அப்படித்தான் தங்கம், ப்ளூ ஸ்டார் படங்களில் நடித்து இப்போது பல்டி திரைப்படத்திலும் நடித்துள்ளேன் என சாந்தனு மனம் திறந்து பேசியுள்ளார்.