தென்னிந்திய திரையுலகில் முன்னணி இயக்குனராக திகழ்ந்து கொண்டிருக்கும் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தற்போது ஜவான் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் கதாநாயகனாக ஷாருக்கான் நடிக்க நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிலையில் யோகி பாபு, தீபிகா படுகோனே மற்றும் பிரியாமணி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
அதே சமயம் இந்த படத்தின் மூலம் பாலிவுட் திரை உலகில் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார். பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள இந்த திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாக உள்ளது. ஷாருக்கான் நடிப்பில் இறுதியாக வெளியான பாதாம் திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் தற்போது ஜவான் திரைப்படத்தை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் ஜவான் படம் வெற்றி பெற வேண்டும் என்று நடிகர் ஷாருக்கான் மற்றும் நயன்தாரா ஆகியோர் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர். நடிகர் ஷாருக்கான் மற்றும் அவரின் மகள் சுகானா மற்றும் நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் ஆகியோரும் திருப்பதிக்குச் சென்று சாமி தரிசனம் செய்தனர்.
நேற்று இரவு திருப்பதிக்கு சென்று அவர்கள் அங்கேயே தங்கி இன்று காலை சுப்ரபாத சேவையில் சாமி தரிசனம் செய்தனர். திருப்பதிக்கு முதல்முறையாக சென்று உள்ள நடிகர் ஷாருக்கான் வேஷ்டி சட்டை அணிந்து சாமி தரிசனம் செய்த நிலையில் தற்போது அது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
நீண்ட இடைவேளைக்குப் பிறகு, தனது அழகான மனைவியைக் காணப் போகிறோம் என்ற எதிர்பார்ப்புடன் ஒரு கணவன் வீட்டிற்கு விரைந்தார். ஆனால்,…
மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த வாலிபர் ஒருவரை, செவிலியர் அதிகாரி பகிரங்கமாக மிரட்டியுள்ள அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
பெற்றோரின் பேச்சைக் கேட்காமல் வீட்டை விட்டு வெளியேறித் திருமணம் செய்துகொண்ட ஒரு பெண்ணின் நிதர்சனமான வாழ்க்கைப் போராட்டத்தை இந்தப் பதிவு…
குருக்ராமில் உள்ள ஒரு பெருநிறுவனத்தில் பணிபுரிந்து வந்த அன்ஷிகா சிங் என்ற பெண், அங்குள்ள பரபரப்பான வாழ்க்கை முறை மற்றும்…
நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா குறித்துப் பரவி வரும் விவாகரத்து வதந்திகளுக்கு விஜய்யின் தந்தை எஸ். ஏ.…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகத்தின் 'விசில்' சின்னத்திற்கு வாக்களிக்குமாறு அக்கட்சியின் தலைவர் விஜய் மக்களுக்கு உருக்கமான கடிதம்…