நான் தேவயானி கணவரை கலாய்த்தனா?.. உண்மையில் இதுதான் நடந்தது.. விளக்கம் கொடுத்த சந்தானம்..!

By Nanthini on வைகாசி 14, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்த நடிகைகளில் தேவயானியும் ஒருவர். வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிப்பது மற்றும் படம் தோல்வியை தழுவினாலும் இவருடைய கதாபாத்திரம் பேசப்படும் அளவுக்கு நடிப்பை வெளிப்படுத்துவது என ஒரு கலக்கு கலக்கிக் கொண்டிருந்தார். இப்படி சினிமாவில் பிஸியாக இருந்த தேவயானி கடந்த 2001 ஆம் ஆண்டு இயக்குனர் ராஜகுமாரனை காதலித்த திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் பெற்றோர்கள் சம்மதம் இல்லாமல் நடந்தது. கடந்த 24 ஆண்டுகளாக இருவரும் தங்களது இல்லற வாழ்க்கையில் நிம்மதியாக வாழ்ந்து வருகின்றனர். இன்னும் சொல்லப்போனால் தமிழ் சினிமா பிரபலங்களில் மிகவும் பாராட்டுக்குரிய தம்பதிகளாக இவர்களை கூறலாம்.

சுவர் ஏறி குதிச்சு கல்யாணம் பண்ண காரணமே இதுதான்.. அந்த இயக்குனர்!  வீட்டிலும் பிரச்சனை.. தேவயானி ஓபன் | Actress Devayani about her love and  marriage with her husband ...

   

இந்த தம்பதியினருக்கு இனியா குமாரன் மற்றும் பிரியங்கா குமாரன் என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். தேவயானியும் இயக்குனர் ராஜகுமாரனும் அடிக்கடி படங்களில் நடித்து வருகின்றனர். இதில் ராஜகுமாரன் சந்தானம் கதாநாயகனாக நடித்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற திரைப்படத்தில் நடித்திருப்பார். அந்தத் திரைப்படம் நகைச்சுவையான படம் என்பதால் சந்தானம் ராஜகுமாரனை மிகவும் பயங்கரமாக கலாய்த்து இருப்பார். இப்படியான நிலையில் நடிகை தேவயானி சமீபத்தில் அளித்த பேட்டியில் அந்த திரைப்படத்தில் தன் கணவர் நடித்தது மிகவும் வருத்தமாக இருந்ததாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில், சந்தானம் கலாய்த்ததை நான் ஏற்றுக் கொள்ளவில்லை.

   

என் புருஷனை சந்தானம் மிகவும் மோசமாக கலாய்க்கிறார்.. எனக்கு அது பிடிக்கல..  தேவையாணி வருத்தம்! | Actress Devayani Interview About she did not likes Her  Husband Worked With ...

 

 

அது எனக்கு சுத்தமா பிடிக்கல. எனக்கு அந்த விஷயமே பிடிக்கவில்லை. எனது கணவர் ஏன் அந்த கதாபாத்திரத்தில் நடித்தார் என்று கூட எனக்கு தெரியவில்லை. சந்தானம் படத்தில் நடிக்கிறார் என்று மட்டும் தெரியும். ஆனால் இது போன்ற கதாபாத்திரம் என்று எனக்கு தெரியாது. என் கணவர் அதை ஏற்று நடித்துள்ளார். ஆனால் அது எனக்கு பிடிக்கவில்லை எனக்கு வருத்தத்தை தான் கொடுத்தது. எனக்கு அந்த கதாபாத்திரம் மற்றும் சந்தானம் என்னுடைய கணவரை கலாய்ப்பது பிடிக்கவே இல்லை என்று எனது கணவரிடம் நான் சொல்லிவிட்டேன். நான் இதுவரை அந்த படத்தை முழுவதுமாக பார்க்கவும் இல்லை என்று மன வருத்தத்துடன் பேசி இருந்தார்.

என் கணவரை சந்தானம் அப்படி பேசியது தப்பு…. நடிகை தேவயானி வேதனை!

இப்படியான நிலையில் தேவையான குற்றச்சாட்டுக்கு சந்தானம் சமீபத்தில் அளித்த பேட்டியில் பதில் அளித்துள்ளார். அதில், வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் திரைப்படத்தில் நடிப்பதற்காக ராஜ்குமார் சார் கிட்ட பேசும்போதே இது ஒரு பவர் ஸ்டார் மாதிரியான கேரக்டர் என்று சொல்லிட்டோம். வயசுக்கு மீறி நிறைய விஷயங்களை ஒருத்தன் பண்ணுவான் ஒரு கட்டத்தில் அவனை நாங்கள் கலாய்ப்போம் அதுதான் அங்க நடக்கும் என்று சொல்லிட்டோம். மொத்த ஸ்கிரிப்ட்டையும் வாங்கி படிச்சு பாத்துட்டு சரி நான் பண்றேன் என்று சம்மதம் தெரிவிச்சாரு.

என் புருஷனை சந்தானம் மோசமாக கலாய்த்தார்... நடிகை தேவயானி ஆதங்கம்! - மனிதன்

முதலில் அவர் என்ன கலாய்ப்பார் அதுக்கப்புறம் தான் நான் பேச ஆரம்பிப்பேன். இவர் மட்டும் இல்ல எல்லார்கிட்டயுமே ஸ்கிரிப்ட் கொடுத்து இப்படித்தான் டயலாக் இருக்கும் இது மாதிரி தான் காட்சிகள் இருக்கும் உங்களுக்கு ஓகே என்றால் சொல்லுங்க பண்ணலாம் என்று நாங்க முதலிலேயே சொல்லிடுவோம். அவங்க சம்மதம் தெரிவிச்சா தான் எங்களால நல்லபடியா அந்த காட்சியை எடுத்து முடிக்க முடியும். அவர் அந்த காட்சியில் நடிக்க எல்லா டயலாக்கையும் படிச்சிட்டு ஒப்புக்கொண்டதால்தான் அதில் நடிக்க வைத்தோம் என்று சந்தானம் விளக்கம் அளித்துள்ளார்.