விஜயின் அந்த பட ரிலீஸ் தள்ளிப் போக காரணமே நான் தான்.. ஓபனாக பேசிய நடிகர் சந்தானம்..!

By Nanthini on வைகாசி 14, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் தற்போது முன்னாடி காமெடி நடிகராக மட்டுமல்லாமல் ஹீரோவாகவும் பலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சந்தானம். லொள்ளு சபா இயக்குனர் ராம் பாலா இயக்கத்தில் சந்தானம் நடித்த தில்லுக்கு துட்டு பார்ட் 1 மற்றும் பார்ட் 2 ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. ராகவா லாரன்ஸ் ஸ்டைலில் ஹாரர் காமெடியை கையில் எடுத்து சந்தானமும் வெற்றியை ருசித்துள்ளார். டிடி ரிட்டன்ஸ் என்ற தலைப்பில் இறுதியாக வெளியான படத்தை ராம் பாலாவுக்கு பதிலாக பிரேம் ஆனந்த் இயக்கியிருந்த நிலையில் அதன் தொடர்ச்சியாக தற்போது டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படத்தையும் அவரே இயக்கியுள்ளார்.

Santhanam as the protagonist | கதாநாயகனாக சந்தானம்

   

சந்தானம், செல்வராகவன் மற்றும் கௌதம் மேனன் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இந்த திரைப்படம் வருகின்ற மே 16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. நடிகர் ஆர்யா தன்னுடைய நண்பர் சந்தானத்துக்காக ஒரு படத்தை தயாரித்து உள்ளார். ஆர்யாவின் தி ஷோ பீப்பிள் தயாரிப்பு நிறுவனம் மற்றும் நிஹாரிகா என்டர்டெயின்மென்ட் இணைந்து இந்த திரைப்படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் சொகுசு கப்பலில் எல்லாம் சூட் செய்து உருவாக்கியுள்ளனர்.

   

டிடி நெக்ஸ்ட் லெவல் ஃபர்ஸ்ட் லுக் சந்தானத்தின் பிறந்தநாளுக்காக  வெளியிடப்பட்டது தமிழ் திரைப்படம், இசை விமர்சனங்கள் மற்றும் செய்திகள்

 

நண்பனோட பணம் கொஞ்சம் பார்த்து பண்ணுங்க என்று விமர்சகர்களிடம் கோரிக்கை வைத்த சந்தானம் இந்த படத்தில் youtube விமர்சனராகவே நடித்துள்ளார்.  இப்படியான நிலையில் நடிகர் விஜய்யை முதல்முறையாக அரசியலில் இழுத்து விட்டதே நான்தான் என்று நடிகர் சந்தானம் டிடி ரிட்டன்ஸ் நெக்ஸ்ட் லெவல் படத்துக்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசியுள்ளார். சந்தானத்திடம் விஜய்யின் தலைவா படத்தில் அவர் பேசிய வசனம் பற்றி கேட்கும் போது தலைவா படம் ரிலீஸ் தள்ளி போகவே காரணம் நான் பேசிய வசனம் தான் என்று விஜய் சொன்னதாக கூறியுள்ளார்.

விஜய்யோட அந்த படம் ரிலீஸ் தள்ளிப்போக காரணமே நான் தான்!.. ஓபனாக ஒத்துக்கொண்ட  சந்தானம்!.. | santhanam says he is the main reason for vijay's thalaiva  movie release delay

தலைவா படம் ஏன் தளபதி சொன்ன தேதியில் ரிலீஸ் ஆகவில்லை என்று தெரியாமல் கேட்டுட்டேன். நீ பாட்டுக்கு போற போக்கில் அரசியல்வாதியாக அனைத்து தகுதியும் உன்கிட்ட இருக்குங்க டயலாக் பேசிட்ட அது ஒரு சிலருக்கு பிடிக்காமல் தான் பஞ்சாயத்து என்று விஜய் சொன்னாரு. விஜயை முதன்முதலாக அரசியலில் இழுத்து விட்டது நான்தான் என்று நினைக்கிறேன் என சந்தானம் அந்த பேட்டியில் பேசியுள்ளார்.