இயக்குனர்கள் பாலா மற்றும் அமீர் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த பிறகுதான் சினிமாவில் இயக்குனராக, நடிகராக சசிக்குமார் உருவானார். இதுகுறித்து சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் சசிக்குமார் கூறியதாவது, பாலா இயக்கிய சேது படத்தில் நான் உதவி இயக்குனராக இருந்தேன். அந்த படத்தில் விக்ரம் மட்டும் பல கெட்டப்பில் நடிக்கலே. நானும் நடிச்சிருக்கேன். அது யாருக்குமே தெரியாது.
அந்த படத்தில் வர்ற ஒரு சீனில், மனநல காப்பகத்தில் மொட்டை போட்ட நிறைய பேர் இருப்பாங்க. அப்போ மொட்டை பத்தலைன்னு என்னையும் மொட்டையடிச்சு டவுசர் போட்டு உட்கார வைத்து விட்டாங்க. வேற வழியில்ல. நானும் அந்த சீன்ல நடிச்சேன். ஆனா நான்தான் அசிஸ்டன்ட் டைரக்டர். அதனால எல்லாத்தையும் பார்த்துக்கன்னு பாலா சார் என்கிட்ட சொல்லிட்டார். ஆனா நான் எது சொன்னாலும், அங்க எவனும் கேக்க மாட்டேங்குறான்.
டேய் நீயும் என்னை மாதிரி நடிக்கத்தானே வந்திருக்கறேன்னு அங்க இருக்கறவங்க எவனும் நான் சொன்னா கேட்க மாட்டாங்க, எனக்கு ஒண்ணுமே புரியல. அப்போ அங்க இருந்த கிளாப் போர்டை தூக்கி கையில் வச்சிக்கிட்டேன். எவனாவது என்னை கேட்டா, இங்க பாருடா நான்தான் அசிஸ்டென்ட் டைரக்டர்ன்னு சொல்லி கிளாப் போர்டை காட்டி காட்டி அவங்களை வேலை வாங்கினேன் என்று நடிகர் சசிகுமார் கூறியிருக்கிறார்.
