நடிகர் சசிக்குமார் சுப்ரமணியபுரம் என்ற படத்தை இயக்கி ஹீரோவாக அறிமுகமானார். பிறகு நாடோடிகள் சுந்தரபாண்டியன் குட்டிப்புலி என பல படங்களில் ஹீரோவாக நடித்தார். பல படங்களை அவரே சொந்தமாகவும் தயாரித்தார். கடந்தாண்டில் சசிக்குமார் சிம்ரன் நடித்த டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய வெற்றியை பெற்றது. இப்போது சசிக்குமார் நடித்த மை லார்ட் படம் ரிலீஸாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில் நடிகர் சசிக்குமார் நடிக்கும் புதிய படத்தின் தகவல் வெளியாகி உள்ளது. இயக்குனர் செல்வராகவனிடம் உதவி இயக்குனராக இருந்த மணிகண்டன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிகர் சசிக்குமார் நடிக்கிறார். இதில் நாயகியாக மானஸா வாரணாசி நடிக்கிறார். இந்த படத்தில் நடிகர் சசிக்குமார் முதல் முறையாக போலீஸ் அதிகாரியாக முறுக்கு மீசை கெட்டப்பில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
