போஸ் வெங்கட் இயக்கத்தில் விமல் நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் தான் சார். இந்தத் திரைப்படத்தை வெற்றிமாறன் தயாரித்துள்ள நிலையில் விமலுடன் இணைந்து சரவணன், விஜய் முருகன், ஜெயபாலன் மற்றும் ரமா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சாயா கண்ணன் என்பவர் இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இன்று நடைபெற்ற இப்படத்தில் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் வெற்றிமாறன், போஸ் வெங்கட், விமல் மற்றும் விஜய் சேதுபதி உள்ளிட்ட சிலர் கலந்து கொண்டனர்.

அந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி, சார் படத்தை பார்த்து விட்டேன், மிகவும் நல்ல படம். மீண்டும் ஒருமுறை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். இந்தப் படத்தில் இடம்பெற்று இருக்கக்கூடிய விஷயங்கள் எல்லாம் நம்மை சிந்திக்க வைக்கும். விமலுக்கு இது ஒரு முக்கியமான படமாக இருக்கும் என பேசினார். மேலும் தொடர்ந்து பேசிய விஜய் சேதுபதி, இப்படத்தில் நடித்த சரவணன் பார்த்து அழகா இருந்தீங்க என்று கூறினார்.

அதற்கு சரவணன் விஜய் சேதுபதியின் காலைத் தொட்டு கையெடுத்து கும்பிட்டார். உடனே விஜய் சேதுபதி கொஞ்சம் பெரிய மனுஷன் மாதிரி நடந்துக்கோங்க என்று கூறினார். உடனே சரவணன் குறுக்கிட்டு இந்த வார்த்தையை சொல்லுவதற்கு காரணம் ‘அடுத்த படத்தில் விஜய் சேதுபதிக்கு அப்பாவாக நடிக்கிறேன், அதனால் தான் அவர் இப்படி சொல்கிறார்’ என்று சரவணன் கூறினார்.

