Tupperware இந்த பெயரை நாம் அதிக அளவில் கேள்விப்பட்டிருப்போம். குளிர்சாதன பெட்டிகளில் உணவுகளை பதப்படுத்தவும் குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் லஞ்ச் போன்றவைகளை கொடுத்து விடவும் இன்றைய பல அம்மாக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு புகழ் பெற்ற பிராண்ட் ஆகும். Tupperware என்றாலே தரமான பிளாஸ்டிக் என்ற பெயரை பெற்று நல்ல விற்பனை ஆகிக்கொண்டிருந்த இந்த டப்பர்வேர் நிறுவனத்திற்கு இன்று நிதி நெருக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனை எதனால் ஏற்பட்டது Tupperwareன் வரலாறு என்ன என்பதை பற்றி இனி காண்போம்.
Tupperware ஆனது 1946 ஆம் ஆண்டு இயல் சிலாஸ் டப்பர் என்ற ரசாயன பொறியாளரால் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது. பிளாஸ்டிக் பொருள்களிலேயே தரமானதாகவும், நச்சுத்தன்மையற்றவையாகவும், நீடித்தவையாகவும், நெகிழ்வுத் தன்மையாகவும் மற்றும் மணமற்றவையாகவும் வீட்டில் பயன்படுத்த இது கண்டுபிடிக்கப்பட்டது. சீல் மச்சம் பர்ப் முத்திரையுடன் விற்பனைக்கு வந்தது. காப்புரிமை பெற்ற இந்த Tupperware நிறுவனம்தான் பெரும்பாலான வீடுகளில் பயன்படுத்தும் பெயராக மாறியிருக்கிறது.
Tupperware அறிமுகமான உடனேயே புகழ் பெறவில்லை. Tupperwareன் வளர்ச்சி ஆனது பிரௌனி வைஸ் என்ற என்ற பெண்மணி ஒரு புரட்சிகரமான விற்பனை மாதிரியே உருவாக்கிய பின்னரே சாத்தியமானது. இது Tupperware ஐ சர்வதேச புகழுக்கு கொண்டு சென்றது. 1950 களின் முற்பகுதியில் Tupperwareல் சேர்ந்த பிரவுனி வைஸ் இரண்டாம் உலகப் போரின் போது வேலை முடிந்து வீட்டுக்கு செல்லும் அமெரிக்க இளத்தரசிகளுக்கு இதை விற்பனை செய்யலாம் என்று உணர்ந்தார். அதற்காக பிரௌனி வைஸ் விற்பனை மாதிரியே உருவாக்கினார். அந்த விற்பனைக்கு பார்ட்டி பிளான் என்று பெயரிட்டார். இந்த திட்டத்தில் பெண்கள் வீட்டிலேயே இருந்து பணம் சம்பாதிக்க வேலைவாய்ப்பை ஏற்படுத்தியது.
பிரௌனி வைஸின் இந்த திட்டம் மாபெரும் வெற்றி பெற்று அதிக விற்பனையாகவும் ஆட்சேர்ப்பு செய்யும் நபர்களை தேர்ந்தெடுத்து வெகுமதி அளிப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தார். அப்படி இந்த நிறுவனம் வளர்ந்தது. ஒரு காலகட்டத்திற்கு பிறகு நேரடி சந்தேகப்படுத்துவதில் Tupperware மாறியது. அங்கீகரிக்கப்பட்ட விநியோகம் மூலம் விற்பனை செய்தது. இன்று Tupperware உலகெங்கிலும் உள்ள வீட்டு உபயோகத்தின் அடிப்படையில் உலகம் முழுவதும் பிரபலமான பிராண்டாக இருக்கிறது.
இத்தனை ஆண்டு காலமாக விற்பனையான பேரும் புகழும் பெற்ற Tupperware தற்போது நிதி நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறது. தற்போது டப்பர்வேரின் பங்குகள் 50% அதிகமாக சரிந்துள்ளது. இருப்பினும் இந்த நிறுவனத்தை தக்க வைக்க தொழிலாளர் பணி நீக்கம் புதிய சிஇஓக்களை தேர்ந்தெடுத்தல் போன்ற பல மாற்றங்களை நிறுவனம் செய்தது.
ஆனாலும் சமீபத்திய ஆண்டுகளில் Tupperware பிராண்டுகளைப் போலவே உள்ளூர் பிராண்டுகள் குறைந்த விலையில் தயாரிப்புகளை வெளியிட்டனர். இந்த போட்டியை Tupperware ஆல் சமன்படுத்த முடியவில்லை. தொழிலில் தலைமைத்துவத்தையும் வியாபார யுக்தியையும் மாற்றிக் கொண்டாலும் நஷ்டத்தை டுப்பெறுவாரே நிறுவனத்தால் ஈடு கட்ட முடியவில்லை.
இந்த உச்சபட்ச நிதி நெருக்கடியின் காரணமாக Tupperware பிராண்ட் அதன் நிறுவனம் திவால் ஆகிவிட்டதாக அறிவிக்க கோரி மனு அளித்துள்ளது. இந்த Tupperware திவால் நிலைக்கு வந்தால் அது நுகர்வோர் மற்றும் முதலீட்டர்களை பாதிக்கும். மக்கள் விரும்பும் தயாரிப்புகள் சந்தையில் எளிதாக கிடைக்காமல் போகலாம் முதலீட்டாளர்கள் குறிப்பிட்டாக இழப்புகளை சந்திக்க நேரிடும். 80 வருடங்களாக வீட்டு பெயராக இருக்கும் ஒரு பிராண்டின் முடிவாக இந்த திவால் நிலை அறிவிப்பு இருக்கலாம்.