விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் சீரியல் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’. ஒரு சாதாரண குடும்பக் கதையை மையமாகக் கொண்ட ஒரு தொடர். இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், குமரன் தங்கராஜன், ஹேமா, சரவண விக்ரம், தீபிகா என பல நடிகர்கள் நடிக்கிறார்கள். இந்த சீரியல் அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசக் கதை. இந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பும், பாராட்டும் பெற்று வருகிறது.
மேலும், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரை தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் டப்பிங் செய்து வருகிறார்கள். அந்த அளவிற்கு பாப்புலர் ஆன சீரியல். பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணனின் உண்மையான பெயர் சரவணா விக்ரம். இவர் முதன் முதலில் ‘கண்மணி’ என்ற குறும்படம் மூலம் தான் அறியப்பட்டார். அதே போல இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சின்னத்தம்பி’ சீரியலின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். ஆனால், இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது என்னவோ ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் தான்.
இவர் தற்பொழுது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்க கூடியவர் சரவண விக்ரம். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்னர், தனது இன்ஸ்டா பக்கத்தில் மக்களிடம் ஆதரவு கேட்டு வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்பொழுது படுவைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…
சென்னை எண்ணூர் தாழங்குப்பம் பகுதியைச் சேர்ந்த தம்பதியினரின் இரண்டரை வயது பெண் குழந்தைக்கு, கடந்த 15-ஆம் தேதி திடீரென காய்ச்சல்…
திமுகவின் முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளது தமிழக…
ஹைதராபாத் ஜூபிலி ஹில்ஸில் வசித்து வந்த ஓய்வுபெற்ற காவல் உயரதிகாரியின் வீட்டில் நிகழ்ந்த கொடூரக் கொலை மற்றும் கொள்ளைச் சம்பவத்தில்,…
தமிழ்நாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்கத் திருக்கோவில்களுக்கு நாள்தோறும் வருகை தரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு, வழங்கப்படும் அன்னதானம் மற்றும் பிரசாதங்களின் தரம், சுகாதாரம்…
பாஜக முன்னாள் தேசிய மகளிரணி தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன், தமிழகத்தில் தவெக அரசு மீது கடுமையான விமர்சனங்களை…
கொல்கத்தாவில் 13 வயது சிறுமியை 18 வயது இளைஞர் முத்தமிட்டதைக் கண்ட அவரது குடும்பத்தினர், இளைஞரையும் அவரது நண்பரையும் வீட்டிற்கு…