
CINEMA
இதுதான் கடைசி…! இனிமேல் நான் இதை செய்ய முடியாது…!’ பிக்பாஸ்க்கு சென்ற பாண்டியன் ஸ்டோர்ஸ்’ நடிகர் வெளியிட்ட கடைசி (வீடியோ)…!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் சீரியல் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’. ஒரு சாதாரண குடும்பக் கதையை மையமாகக் கொண்ட ஒரு தொடர். இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், குமரன் தங்கராஜன், ஹேமா, சரவண விக்ரம், தீபிகா என பல நடிகர்கள் நடிக்கிறார்கள். இந்த சீரியல் அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசக் கதை. இந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பும், பாராட்டும் பெற்று வருகிறது.
மேலும், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரை தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் டப்பிங் செய்து வருகிறார்கள். அந்த அளவிற்கு பாப்புலர் ஆன சீரியல். பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணனின் உண்மையான பெயர் சரவணா விக்ரம். இவர் முதன் முதலில் ‘கண்மணி’ என்ற குறும்படம் மூலம் தான் அறியப்பட்டார். அதே போல இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சின்னத்தம்பி’ சீரியலின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். ஆனால், இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது என்னவோ ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் தான்.
இவர் தற்பொழுது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்க கூடியவர் சரவண விக்ரம். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்னர், தனது இன்ஸ்டா பக்கத்தில் மக்களிடம் ஆதரவு கேட்டு வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்பொழுது படுவைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…
View this post on Instagram