தமிழ் சினிமாவில் 90 காலகட்டத்தில் முன்னணி நடிகராக வளம் வந்தவர் தான் நடிகர் சரத்குமார். இவர் இயல்பாகவே ஒரு பத்திரிக்கையாளர். ஆரம்பத்தில் ஒரு துணை நடிகராக தான் சினிமாவுக்குள் நுழைந்தார். அதுவும் எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் ஓரளவுக்கு வரவேற்பை பெற்று இருந்தார். அவர் முதன் முதலில் ஹீரோவாக அறிமுகமான திரைப்படம் தான் சூரியன். அந்த படத்தில் மொட்டை தலையுடன் சரத்குமார் தோன்று இருக்கும் காட்சி அனைவரையும் ஆச்சரியமாக பார்க்க வைத்தது. அந்த படத்தில் மாபெரும் வெற்றி சரத்குமாரை ஒரு தவிர்க்க முடியாத நடிகராக மாற்றியது. மேலும் அவரை அனைவரும் சுப்ரீம் ஸ்டார் என்று அழைக்க தொடங்கினர்.

அந்த படத்தை அடுத்து பல படங்களில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அவருடைய வெற்றி படங்களின் லிஸ்டில் ஏராளமான படங்கள் சேர்ந்து கொண்டே இருந்தன. குறிப்பாக நாட்டாமை, நட்புக்காக, சேரன் பாண்டியன் மற்றும் சூரியவம்சம் போன்ற பல படங்கள் அவருடைய வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. தற்போதும் தொடர்ந்து பிஸியாக படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் சரத்குமார் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், சுபாஷ் சந்திர போஸ் கதையை நானே இயற்கை அதில் நடிக்க வேண்டும் என்று எனக்கு பல நாள் ஆசை. அவருடைய வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன்.

ஆனால் இப்போ நிற்க நேரம் இல்லாம ஓடிக்கொண்டே இருப்பதால் அதை நிறைவேறுமா என தெரியவில்லை. சித்தார்த் படத்தில் கமிட் ஆகியுள்ளேன். அடுத்து பிரதீப் ரங்கநாதன் உடன் ஒரு படம், மலையாள மற்றும் கன்னடத்தில் என தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகியுள்ளதால் இப்படம் பற்றி சிந்திக்க நேரமில்லை. ஆனா நிச்சயம் ஒரு நாள் இந்த படத்தை நான் எடுப்பேன் என்று சரத்குமார் பேசியுள்ளார்.
