Categories: சினிமா

தொடர் தோல்வியால் ரூட்டை மாற்றும் சந்தானம்… பெரிய ரிஸ்க் எடுக்க தயரான பார்த்தா…!

Spread the love

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக தன்னுடைய சினிமா வாழ்க்கையை தொடங்கியவர் தான் நடிகர் சந்தானம். தற்போது இவர் வளரும் ஹீரோவாக இருக்கிறார். அதுவும் விஜய் டிவியில் மிகவும் பாப்புலரான நிகழ்ச்சியில் ஒன்றுதான் லொள்ளு சபா. 90ஸ் கிட்ஸ்களுக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சி என்று கூறலாம். அடுத்த வாரம் ரிலீஸ் ஆகக்கூடிய படங்கள் அனைத்தையும் காமெடியாக சித்தரித்து தொகுத்து வழங்குவது தான் இந்த நிகழ்ச்சியின் நோக்கம். இந்த நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் இருந்தது.

அந்த நிகழ்ச்சியில் நடித்த நடிகர்கள் தான் இன்றைய சினிமாவில் பல முக்கிய அந்தஸ்தை பெற்ற நடிகர்களாக உள்ளனர். அவர்களில் சந்தானம், யோகி பாபு மற்றும் சுவாமிநாதன் ஆகிய நடிகர்களும் அடங்குவார்கள். அதிலும் இவர் நடிகர் ஆர்யா, உதயநிதி ஸ்டாலின், விஷால் ஆகியோருடன் சேர்ந்து நடிக்கும் படங்களில் காமெடிக்கு பஞ்சமே இருக்காது. அந்த அளவுக்கு மிகச் சிறப்பாக நகைச்சுவை செய்யக்கூடிய ஒரு நடிகர். அதிக அளவில் ஆர்யாவுடன் இணைந்து காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றார்.

இந்த நிலையில் சந்தானம் சமீபத்தில் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்துவிட்டு திரும்பினார். திருப்பதி போனால் திருப்பம் ஏற்படும் என்பது போல தற்போது புதிய திருப்பம் ஒன்றை நிகழ்த்தப் போகிறார் சந்தானம். தில்லுக்குதுட்டு இரண்டாம் பாகம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தை முடித்த பிறகு மொத்தமாய் தன்னுடைய டிராக்கை மாற்ற போகிறாராம்.

சிம்பு, தனுஷ், ஆர் ஜே பாலாஜி போல இவரும் படங்களை இயக்கப் போகிறாராம். அதற்கு கதை கூட ரெடி பண்ணி விட்டதாக கூறப்படுகிறது. தில்லுக்கு துட்டு இரண்டாம் பாகத்திற்கு பிறகு கவலை வேண்டாம், யாமிருக்க பயமேன் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் டி.கேவுடன் ஒரு படம் எடுக்கப் போகிறாராம் சந்தானம். அதன் பிறகு முழுநேர இயக்குனராக மாறுகிறார்.

Soundarya

Recent Posts

“யாரும் எதிர்பார்க்காத டுவிஸ்ட்”… ஈரானுடன் டீல் போட்ட சீனா… ட்ரம்ப்பின் ட்ரூத் சோஷியல் பதிவால் அதிரும் உலக நாடுகள்…!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஹார்முஸ் நீரிணையை சீனாவுக்காக நிரந்தரமாகத் திறப்பதாக அறிவித்துள்ளது சர்வதேச அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.…

2 minutes ago

“வாடா மோதிப்பார்க்கலாம்” மயில் vs பாம்பு.. ஜெயிக்கப்போவது யார்..? நடுரோட்டில் நடந்த பயங்கர மோதல்… வைரல் வீடியோ..!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஒரு மயில் மற்றும் ஒரு பாம்புக்கு இடையே நடக்கும் கடுமையானப் போராட்டம்…

3 minutes ago

உஷார்!.. “பிரிட்ஜ் கம்ப்ரஸர் வெடிக்க இதுதான் காரணமா?”.. கோடை காலத்தில் நீங்கள் செய்ய வேண்டிய 3 தற்காப்பு நடவடிக்கைகள்…!!!

கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், வீடுகளில் பிரிட்ஜ் பயன்பாடு பன்மடங்கு உயர்ந்துள்ளது. இந்தச் சூழலில், பிரிட்ஜை சுவரோடு ஒட்டி…

4 minutes ago

“வாட்ச் முதல் லேட்டஸ்ட் ஐபோன் வரை!” – ஒவ்வொரு ஆண்டும் ஊழியர்களை திக்குமுக்காட வைக்கும் ‘மெகா’ பாஸ்… சீன நிறுவனத்தின் தாராள குணத்தால் கடுப்பான இந்திய நெட்டிசன்கள்…!

உலகெங்கும் ஆட்குறைப்பு மற்றும் பொருளாதார மந்தநிலை குறித்த கவலைகள் நிலவி வரும் சூழலில், சீனாவைச் சேர்ந்த மீடியாஸ்டார்ம் (Mediastorm) நிறுவனம்…

6 minutes ago

பகீர் வீடியோ..! சாலையில் சிதறிய கோழிகள்… மனிதாபிமானத்தை காற்றில் பறக்கவிட்டு வேட்டையாடிய மக்கள்… வைரல் வீடியோ.!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், சாலையில் கோழிகள் ஏற்றிச் சென்ற வண்டி விபத்துக்குள்ளானதை அல்லது நின்றுகொண்டிருந்ததைச் சாதகமாக்கிக்…

7 minutes ago

“போதும் கீழே இறங்குங்க”… நேரலையில் எடப்பாடியைத் தொட்டு மோடி சொன்னது என்ன?… குமரியில் பரபரப்பு….!

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் பரப்புரை உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இதன் ஒரு பகுதியாக,…

9 minutes ago