“என்ன தவம் செய்தேனோ இந்த அன்பு கிடைக்க” நீங்க இல்லாம நான் இல்லை… எஸ்.ஜே சூர்யா போட்ட உருக்கமான பதிவு..!!

By Soundarya on ஆனி 30, 2025

Spread the love

தமிழ் சினிமாவின் மோஸ்ட் வாண்டட் வில்லன் நடிகராக வலம் வருகிறார் எஸ் ஜே சூர்யா. அவர் வில்லனாக நடித்த மாநாடு, மார்க் ஆண்டனி உள்ளிட்ட படங்களின் அவரின் மிரட்டலான நடிப்புக்காகவே பாராட்டப்பட்டன. இதையடுத்து இப்போது தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லனாக அடுத்தடுத்து கமிட்டாகி வருகிறார். தமிழ் சினிமாவில் நடிகராக வேண்டும் என்ற ஆசையோடு வந்த இவர் முதலில் பாரதிராஜா மற்றும் இயக்குனர் வசந்த் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். அஜித்தின் ஆசை படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய எஸ் ஜே சூர்யாவின் அர்ப்பணிப்பை பார்த்துவிட்டு அவருக்கு தன்னுடைய படத்தை இயக்கும் வாய்ப்பைக் கொடுத்துள்ளார்.

இயக்குனர் ஆவதற்கு முன்பு எஸ் ஜே சூர்யா பாரதிராஜா, ஜி எம் குமார், வசந்த் மற்றும் லிவிங்ஸ்டன் ஆகியோரிடம் உதவி இயக்குனராக வேலை செய்துள்ளார். அதன் பின்னர் வாலி படத்தை இயக்கி அஜித்துக்கு ஒரு சூப்பர் ஹிட்டைக் கொடுத்தார். அந்த படம் அவருக்கும் திருப்புமுனையாக அமைந்தது. அந்த படம் முடிந்ததுமே விஜய்யை வைத்து குஷி திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பைப் பெற்றார். அந்த படம் ஹிட்டானதால் இந்தி மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்தார். அதன் பின்னர் நியூ படத்தின் மூலம் நடிகர் ஆகி தற்போது தென்னிந்திய சினிமாவின் பரபரப்பான நடிகராக இருக்கிறார்.

   

நடிகரான பின்னர் அவர் அதிகமாகப் படங்களை இயக்கவில்லை. கடைசியாக இசை என்ற படத்தை இயக்கினார். அந்த படம் தோல்விப் படமாக அமைந்தது. இந்நிலையில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது அவர் கில்லர் என்ற படத்தை இயக்கவுள்ளார். படத்தின் பூஜை நேற்று முன்தினம் போடப்பட்டது . இந்நிலையில் இதுகுறித்து பதிவிட்டுள்ள எஸ் ஜே சூர்யா, “கில்லர் திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியானதும் என் மீது அளவற்ற அன்பைப் பொழிந்த அன்பும் ஆருயிருமான ரசிகர்களுக்கும் நண்பர்களுக்கும் நன்றி. என்ன தவம் செய்தேன் இந்த அன்பு கிடைப்பதற்கு. கில்லர் படம் குறித்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும்” என்று பேசியுள்ளார்.