Connect with us

Tamizhanmedia.net

இன்னும் கொஞ்ச நாள்ல நான் இறந்து விடுவேனு சொன்னாங்க.. குடும்பத்தோடு கண்ணீர் விட்ட ரோபோ சங்கர்.. உருக்கம்..!!

CINEMA

இன்னும் கொஞ்ச நாள்ல நான் இறந்து விடுவேனு சொன்னாங்க.. குடும்பத்தோடு கண்ணீர் விட்ட ரோபோ சங்கர்.. உருக்கம்..!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நகைச்சுவை நடிகர்களில் ஒருவர்தான் ரோபோ சங்கர். இவர் முதலில் மிமிக்ரி கலைஞராக தன்னுடைய பயணத்தை தொடங்கிய நிலையில் அதன் பிறகு கலக்கப்போவது யாரு மற்றும் அசத்தப்போவது யாரு போன்ற பல நிகழ்ச்சிகளில் பலவிதமான குரல்களில் பேசி அசத்தி மக்கள் மத்தியில் பிரபலமானார்.

அதன் பிறகு தான் சினிமாவிலும் இவருக்கு வாய்ப்புகள் கிடைத்த நிலையில் பல திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்து வருகின்றார். இவர் சமீபத்தில் உடல் எடை மெளிந்து பார்ப்பதற்கே பரிதாபமாக மாறிய புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆனது. இந்நிலையில் ரோபோ சங்கர் கடந்த ஆறு மாதங்களாக மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு உடல்நிலை மோசமாகி வீட்டில் ஓய்வில் இருந்தார்.

அப்போது வீட்டில் பார்க்க வந்தவர்கள் பலரும் ரோபோ சங்கர் இன்னும் கொஞ்ச நாளில் இறந்து விடுவார் என்று கூறினார்கள். அதேசமயம் சமூக வலைத்தளங்களில் அவரின் புகைப்படங்கள் மற்றும் செய்திகள் அவர் இறந்து விடுவார் என அதிகமாக வைரலானது. இதனைப் பார்த்த நடிகர் ரோபோ சங்கரின் குடும்பத்தினர் அனைவரும் கவலை அடைந்து அழுது புலம்பினர். இந்த கவலையான விஷயத்தை நடிகர் ரோபோ சங்கர் சமீபத்தில் ஒரு திரைப்பட விழாவில் கண்ணீருடன் பகிர்ந்து கொண்டார்.

Continue Reading
Advertisement hello world
You may also like...

More in CINEMA

To Top