ரியோவுக்கு அடித்த ஜாக்பாட்…!! வரிசை கட்டி நிற்கும் படங்கள்…. அதில் சிவகார்த்திகேயனா…? செம குஷியில் ரசிகர்கள்…!!

By Devi Ramu on கார்த்திகை 17, 2025

Spread the love

சின்னத்திரையில் தொகுப்பாளராகத் தன் பயணத்தைத் தொடங்கிய ரியோ ராஜ், ‘சரவணன் மீனாட்சி’ போன்ற தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துப் பிரபலமானார். தற்போது திரைப் படங்களில் கவனம் செலுத்தி வரும் இவருக்கு, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

சமீபத்தில் ரியோ நடிப்பில் வெளியான ‘ஆண்பாவம் பொல்லாதது’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் அவருக்கு மற்றொரு பெரிய வெற்றியைத் தேடித் தந்துள்ளது. இந்தப் படத்தின் வெற்றிக்குக் கிடைத்த அங்கீகாரமாக, தற்போது ரியோராஜ் அடுத்ததாக நான்கு புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

   

இதில், ஒரு திரைப்படத்தை பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்பாராஜ் தயாரிக்கிறார். மற்றொன்றை நடிகர் சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. வளர்ந்து வரும் இளம் நடிகர்களை முன்னணி நடிகர்கள் ஆதரித்து வரும் நிலையில், சிவகார்த்திகேயன் ரியோவுக்கு அளிக்கும் இந்த ஆதரவு முக்கியத்துவம் பெறுகிறது.