#image_title
நடிகர் அஜித்தின் ‘அவள் வருவாளா’ படத்தில் டான்சராக அறிமுகமானவர் நடிகர் ரெடின் கிங்ஸ்லி. இதைத்தொடர்ந்து இவர் சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றி வந்தார். கிங்ஸ்லி, நயன்தாரா – நெல்சன் கூட்டணியில் உருவான ‘கோலமாவு கோகிலா’ படத்தின் மூலம் நடிகராக திரையுலகில் கால் பதித்தார்.
இதைத்தொடர்ந்து நெற்றிக்கண், எல்கேஜி, டாக்டர், அண்ணாத்த, பீஸ்ட், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், ஜெயிலர் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான அன்னபூரணி, சதீஷின் கான்ஜூரிங் கண்ணப்பன் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். நடிகர் சூர்யாவின் கங்குவா திரைப்படத்திலும் அடுத்ததாக ரெடின் கிங்ஸ்லி நடித்து வருகிறார்.
இந்நிலையில் சன் தொலைக்காட்சியின் பிரபல சீரியல் நடிகையான சங்கீதாவை ரெடின் கிங்ஸ்லி நேற்று திடீர் திருமணம் செய்துள்ளது சின்னத்திரை, வெள்ளித்திரை வட்டாரத்தினருக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது. மைசூரில் தன் நெருங்கிய நண்பர்கள், நட்பு வட்டாரத்தினர் சூழ இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. இவர்களது திருமண புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தற்பொழுது எந்தவொரு முன்னறிவிப்பும் இன்றி திரை பிரபலங்களுக்கு பத்திரிகை எல்லாம் வைக்காமல் திடீரென தனது திருமணத்தை மைசூரில் ஷூட்டிங் ஸ்பாட்டில் ரகசியமாக செய்து கொண்டது ஏன் எனபயில்வான் ரங்கநாதன் ரகசியங்களை புட்டு புட்டு வைத்துள்ளார். அதாவது அவர் கூறியுள்ளதவது, ’46 வயதாகும் ரெடின் கிங்ஸ்லிக்கு இது முதல் திருமணமா? அல்லது எத்தனையாவது திருமணம் என தெரியாது.
சீரியல் நடிகை சங்கீதாவுடன் சுமார் 1 வருடம் லிவிங் டுகெதர் வாழ்க்கையை வாழ்ந்து வந்த ரெடின் கிங்ஸ்லியை சமீப காலமாக சங்கீதா திருமணம் செய்துக் கொள்ள டார்ச்சர் செய்த நிலையில், கவின் நடித்து வரும் படம் மைசூரில் நடைபெற்று வரும் நிலையில், அங்கேயே தனது திருமணத்தை ரெடின் கிங்ஸ்லி செய்து கொண்டுள்ளார்.’ என்று தெரிவித்துள்ளார் பிரபல சினிமா விமர்சகரான பயில்வான் ரங்கநாதன்.
தமிழகத்தில் பரபரப்பான அரசியல் சூழலில் அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவருடைய இல்லத்தில்…
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சந்தைகளில் விற்பனை செய்யப்படும் வெல்லத்தில், லாபத்திற்காகச் சுண்ணாம்பு, செயற்கை நிறங்கள் மற்றும் சோள மாவு போன்ற…
குறைந்த முதலீட்டில் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் நோக்கில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள ‘அடல் ஓய்வூதியத் திட்டம்’ தற்போது அனைத்து அஞ்சலகங்களிலும்…
தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் விரைவாகச் செல்வதற்காகப் பயன்படுத்தப்படும் ஃபாஸ்டேக் (FASTag) நடைமுறையில், வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் முக்கியத்…
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்ட காலக் கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி, மீண்டும் போராட்டக்…
2026-ஆம் ஆண்டில் குரு பகவான் மிதுனம், கடகம், மற்றும் சிம்மம் என மூன்று ராசிகளுக்குத் தனது இருப்பிடத்தை அதிரடியாக மாற்ற…