பிரபல நடிகரான ரமேஷ் கண்ணா விக்ரமன் இயக்கத்தில் ரிலீசான உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் என்ற திரைப்படம் மூலமாக திரை உலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு பல்வேறு படங்களில் ரமேஷ் கண்ணா நடித்தார். காமெடி நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனர், வசனகர்த்தா என பல திறமைகளை கொண்டவர் ரமேஷ் கண்ணா. சமீபத்தில் ரமேஷ் கண்ணா அளித்த பேட்டியில் கூறியதாவது, நான் அஜித்துடன் அமர்க்களம், அட்டகாசம், ஆஞ்சநேயர், வில்லன், வரலாறு உள்ளிட்ட படங்களில் நடித்தேன்.

ஆனால் விஜய்யுடன் பிரண்ட்ஸ் படத்தில் மட்டுமே இணைந்த நடித்தேன். அந்த படம் சூப்பர் ஹிட் ஆனது. அதன் பிறகு ஓரிரு படங்களில் விஜயுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் தேதி, சந்தர்ப்ப சூழ்நிலையால் அந்த படங்களில் நடிக்க முடியவில்லை. அஜித் என் மனதில் உயர்ந்து நிற்பவர் என்றால் விஜய் மரியாதைக்குரியவர். நீண்ட இடைவெளிக்கு பிறகு எனது மகனால் மீண்டும் விஜயுடன் தொடர்பு ஏற்பட்டது. என் மகன் நடிகர் விஜயை திருமணத்திற்கு அழைக்க கூறினார். நான் அவர்கள் பெரிய மனிதர்கள்.

பிஸியாக இருப்பார்கள் நாம் தொந்தரவு செய்யக்கூடாது என கூறினேன். விஜய் சார் கண்டிப்பா வருவேன் என்று சொல்லி இருப்பதாக எனது மகன் கூறினான். சர்க்கார் திரைப்படத்தில் எனது மகன் ஜஸ்வந்த் உதவி இயக்குனராக வேலை பார்த்தார். நாங்கள் திருமணத்திற்கு அழைப்பதற்காக விஜய் வீட்டிற்கு சென்றபோது அவர் எங்களிடம் அன்பாக பேசினார். இதனையடுத்து எனது மகனின் திருமணத்திற்கு விஜய் வரப்போகிறார் என்று சொன்ன உடனே கூட்டம் அலைமோதியது.

அவர் வருவார் என நாங்கள் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல. உடனே ரசிகர்கள் மண்டபம் முன்னாடி வந்து நின்னுட்டாங்க. கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. சுமார் பத்து நிமிடங்கள் மேடையில் நின்று விஜய் ஜாலியாக பேசி சிரித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். விஜய் மீண்டும் வெளியே அழைத்துச் சென்று காரில் அனுப்பி வைப்பது சவாலான விஷயமாக இருந்தது. இதனையடுத்து போலீஸ் வந்து சார் இது உங்க வீட்டு பங்க்ஷனா..? முன்னாடியே விஜய் சார் வருவாருன்னு சொல்ல மாட்டீங்களா? என கேட்டு என்னை திட்டினார்கள்.

சுமார் 2 மணி நேரம் பயங்கர டிராபிக். விஜய் வந்ததை தெரிந்து அவர் இன்னும் இங்க தான் இருக்காருன்னு நினைத்து கொண்டு ஏராளமான மக்கள் திரண்டனர். நான் போலீஸ் கிட்ட மன்னிப்பு கேட்டேன். சோசியல் மீடியாவிலும் அன்று என் பையன் திருமணம் பயங்கர ட்ரெண்டிங் ஆக இருந்தது. விஜய் எனது மகன் திருமணத்தில் கலந்து கொண்டது ரொம்ப சந்தோஷமா இருந்தது என ரமேஷ் கண்ணா கூறியுள்ளார்.

