தமிழ் திரை உலகில் எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் நுழைந்தவர் தான் நடிகர் அஜித். சாக்லேட் பாயாக நடிக்க தொடங்கி பல திரைப்படங்களில் அப்படியே நடித்து வந்தார். குறிப்பாக இவர் நடித்த ஆசை திரைப்படம் நிறைய பெண் ரசிகைகளை பெற்று தந்தது. வான்மதி திரைப்படத்தின் வெற்றி அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற்று தந்தது. காதல் கோட்டை திரைப்படத்தின் வெற்றி அவரை முன்னணி நடிகராக மாற்றியது. பில்லா மற்றும் மங்காத்தா படங்கள் அஜித்தை மாஸ் நடிகராக உயர்த்தியது. தற்போது விஜய்க்கு நிகரான மார்க்கெட் மதிப்புள்ள நடிகராக அஜித் மாறியுள்ளார். இவருடைய நடிப்பில் இறுதியாக வெளியான விடாமுயற்சி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் அடுத்ததாக குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாக உள்ளது.

இதனிடையே அஜித் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிகளுக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். ஆனால் திரை உலகில் பல காதல்களை அஜித் கடந்து வந்துள்ளார். நடிகை சுவாதி மற்றும் ஹீரா என சிலரை காதலித்த நிலையில் அது கைகூடவில்லை. அப்போதுதான் அமர்க்களம் திரைப்படத்தில் ஷாலினியுடன் நடித்தார். ஷாலினியை பார்த்ததும் காதல் கொண்ட அஜித் ஷாலினியின் சம்மதத்தை பெற பல வழிகளிலும் போராடினார். இறுதியாகத்தான் ஷாலினி ஓகே சொன்னார்.
![]()
அமர்க்களம் திரைப்படத்தில் அஜித்துடன் இணைந்து ரமேஷ் கண்ணா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தத் திரைப்படத்தை தரன் இயக்கியிருந்த நிலையில் படப்பிடிப்பில் அஜித் ஷாலினியை சைட் அடித்துக் கொண்டிருப்பதை பார்த்த ரமேஷ் கண்ணா அவரிடம் சென்று உனக்கு இப்போ நல்ல மார்க்கெட் இருக்கு, உனக்குன்னு ரசிகர்கள் இருக்காங்க, அதை சரியா பயன்படுத்திக் கொள், நடிகையை திருமணம் செய்து கொள்ளாதே, குடும்பப் பாங்கான ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள் என்று அறிவுரை கூறியுள்ளார்.

அவர் அஜித்திடம் பேசிக் கொண்டிருப்பதை பார்த்த படத்தின் இயக்குனர் சரண் அவரை அழைத்து, அஜித் ஷாலினியும் லவ் பண்றாங்க அவங்க ரெண்டு பேருக்கும் இன்னும் ரெண்டு மாசத்துல கல்யாணம், நீங்க இப்படி பேசினா அடுத்த படத்துல உங்களுக்கு அஜித் வாய்ப்பு தர மாட்டாரு என சொல்லி சிரிக்க ரமேஷ் கண்ணா ஷாக் ஆகிவிட்டாராம். இந்த தகவலை ஒரு பேட்டியில் சரண் கூறியுள்ளார்.
