கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் 2009 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் ஆதவன். இப்படத்தில் சூர்யா, நயன்தாரா, சரோஜாதேவி, வடிவேலு மற்றும் ரமேஷ் கண்ணா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இந்த படத்தை கே எஸ் ரவிக்குமார் இயக்கி இருந்தார். இந்த படத்தின் கதையை படத்தில் நடித்திருந்த ரமேஷ் கண்ணா எழுதியிருந்தார். கே எஸ் ரவிக்குமார் மற்றும் ரெட் ஜெயன்ட் இந்த திரைப்படத்தின் கூட்டணி அமைத்திருந்த நிலையில் முன்னதாக கே எஸ் ரவிக்குமார் தன்னுடைய படத்திற்காக கதை தேடிக் கொண்டிருப்பதாக ரமேஷ் கண்ணாவுக்கு தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து தான் எழுதி இருந்த கதையை அவருக்காக ரமேஷ் கண்ணா கொடுத்துள்ளார்.
இந்த கதையைக் கேட்டவுடன் கே எஸ் ரவிக்குமாருக்கு பிடித்துப் போக உடனடியாக ஓகே சொல்லியுள்ளார். பிறகுதான் இந்த கதை படமாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. குறிப்பாக இப்படத்தில் வடிவேலு மற்றும் ரமேஷ் கண்ணா காமெடி என்பது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த நிலையில் ஆதவன் படப்பிடிப்பின் போது நடந்த சம்பவம் குறித்து ரமேஷ் கண்ணா சமீபத்தில் அளித்த பேட்டியில் பகிர்ந்துள்ளார்.
அதில், ஆதவன் படத்துல ஒரு சீன்ல சரோஜாதேவி அம்மா மேக்கப் போடுடா படுத்துட்டு இருப்பாங்க. அப்போ வடிவேலு நீ அப்படியே மேல போ என்று கூறியிருப்பார். இது வடிவேலு அந்த இடத்துல சொந்தமா போட்ட டயலாக். அந்த சீன் முடிஞ்சதுக்கு அப்புறம் சரோஜாதேவி அம்மா எனக்கு போன் பண்ணி, ரமேஷ் கண்ணா இந்த படத்துல நடிக்க நான் உங்ககிட்ட சான்ஸ் கேட்டேனா, நீங்க தானே என்ன கூப்பிட்டீங்க. கூப்பிட்டு வச்சு இது மாதிரி எல்லாம் டயலாக் பேசறது சுத்தமா நல்லா இல்ல.
நான் என்ன மனோரமா மாதிரி காமெடி நடிகையா. நான் ஒரு ஹீரோயின், என்ன மச்சி நீங்க எப்படி இப்படி பண்ணலாம் என்று கோபமாக என்கிட்ட கத்திட்டாரு. உடனே நான் அந்த ஆளு ஒரு லூசு தெரியாம இப்படி பண்ணிட்டான் விடுங்கம்மா என்று அவங்க கிட்ட நான் பேசினேன். பிறகு சில நாளில் சரோஜாதேவி அம்மா அதை மறந்துட்டு என்கிட்ட சகஜமா பேச ஆரம்பிச்சிட்டாங்க என்று ஆதவன் படப்பிடிப்பில் நடந்த சம்பவத்தை ரமேஷ் கண்ணா பகிர்ந்துள்ளார்.