“கனகா இப்படி ஆனதுக்கு காரணம்…” வாழ்க்கையில் நடந்த மிகப்பெரிய துயரம்… உருக்கமாக பேசிய நடிகர் ராமராஜன்…!!

By Devi Ramu on கார்த்திகை 5, 2025

Spread the love

பழம்பெரும் நடிகை தேவிகாவின் மகள் கனகா கரகாட்டக்காரன் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். இந்த படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தில் ராமராஜனுக்கு ஜோடியாக கனகா நடித்திருந்தார். தமிழ் மட்டும் இல்லாமல் மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களிலும் கனகா நடித்துள்ளார். சினிமாவின் புகழ் உச்சிக்கு சென்ற கனகா திடீரென திரையுலகையை விட்டு விலகி சென்றதற்கான காரணம் தெரியாமலேயே இருந்துள்ளது.

தற்போது நடிகர் ராமராஜன் கனகாவை சந்தித்தது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, கனகா சந்தித்த முதல் பெரிய துயரம் தாயின் இறப்பு தான். கனகாவுக்கு அவரது தாய் நடிகை தேவிகா தான் எல்லாமே. அவங்க இறந்ததற்கு பிறகு கனகா மனரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார். நான் கனகாவை நேரில் சென்று பார்த்தேன். முடி எல்லாம் வெளுத்து போய் ஆளே அடையாளம் தெரியாத மாதிரி இருக்காங்க. அம்மா மீது அதீத பாசம் வைத்திருந்த கனகா சினிமாவிலிருந்து விலகி தற்போது பழைய நினைவுகள் இல்லாமலேயே இருப்பதாக ராமராஜன் உருக்கமாக கூறியுள்ளார்.