தியேட்டரில் டிக்கெட் கிழிக்கும் வேலை… கட் பண்ணா தமிழ் சினிமாவின் மோஸ்ட் வாண்டட் ஹீரோ- ராமராஜன் கடந்த வந்த பாதை!

By vinoth on சித்திரை 10, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் ராமராஜன் கோலோச்சியது நான்கே நான்கு வருடங்கள்தான். 1987 முதல் 1990 வரை பிஸியான நடிகராக இருந்தார். அப்போது அவரின் தங்கமான ராசா திரைப்படம் ரஜினியின் மாப்பிள்ளை படத்தின் வசூலையே தாண்டியதாம். ஆனால் 90 களுக்குப் பிறகு ராமராஜனின் மார்க்கெட் சரிய ஆரம்பித்துள்ளது.

அவரும் ஒரு விபத்தில் சிக்கிக் கொண்டார். பின்னர் அரசியலில் ஆர்வம் காட்டினார். குணச்சித்திர வேடங்களில் நடிக்க வந்த வாய்ப்பை நிராகரித்தார். அதனால் சினிமாவில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இடைவெளி விழுந்துவிட்டது. இப்போது சாமான்யன் படம் மூலமாக ரி எண்ட்ரி கொடுத்துள்ளார்.

   

ராமராஜனின் சினிமா வாழ்க்கை ஆரம்பித்ததே ஒரு இன்ப விபத்துதான். ராமராஜன்(அப்போது குமரேசன்) மதுரை மேலூரில் இருக்கும் ஒரு தியேட்டரில் டிக்கட் கிழிக்கும் வேலை செய்து வந்தார். அந்த தியேட்டர் ஓனர் மூலமாக சென்னை வந்து இராமநாராயணன் ஆபிஸ்ல ஆபிஸ் பாயா வேலை பார்தவர் அவரிடமே உதவி இயக்குனர் ஆனார்.

   

அப்படி 40 படங்களுக்கு மேல் உதவி இயக்குனராக வேலை செய்த அவர் ஐந்து படங்களையும் இயக்கியுள்ளார். ஆனால் அவர் நடித்த படங்கள் அடுத்தடுத்து வெற்றி பெற்றதால் அவர் நடிகராகவே தொடர்ந்தார்.  அவர் படங்களில் உச்சம் தொட்டது கரகாட்டக்காரன் திரைப்படம். 300 நாட்களுக்கு மேல் அந்த படம் ஓடி சாதனை படைத்தது.

 

கரகாட்டக்காரன் பட வெற்றி விழாவில் பேசிய கமல்ஹாசன், நான் அபூர்வ சகோதரர்கள் படத்தில் கஷ்டப்பட்டு அப்பு கேரக்டரில் குள்ளமாக நடித்து ரசிகர்களின் பாராட்டை பெற்றேன். ஆனால் தலையில் ஒரு கரகத்தை வைத்து ஆடி அதைவிட அதிக பாராட்டை ராமராஜன் பெற்றுவிட்டார் என பாராட்டி இருந்தார்.

ஒரு கட்டத்தில் அரசியலில் ஆர்வம் காட்டிய ராமராஜன் அதிமுக சார்பாக பிர்ச்சாரம் மேற்கொண்டார். பின்னர் மக்களவை உறுப்பினராகவும் போட்டியிட்டு வென்றார். இதற்கிடையில் அவர் விபத்தில் சிக்கிக் கொண்டதால் படங்களில் நடிக்கவும் முடியவில்லை. நடிகை நளினி உடனான திருமண உறவும் விவாகரத்தில் முடிந்தது. நடித்தால் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என பிடிவாதமாக இருந்ததால் அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்தன.