90-களில் ரஜினி, விஜயை விட அதிக சம்பளம் வாங்கிய ஒரே நடிகர்.. நான்கே படங்களில் தொட்ட உச்சம்..

By vinoth

Updated on:

தமிழ் சினிமாவில் விநியோகஸ்தராகவும் தயாரிப்பாளராகவும் பல படங்களில் பணியாற்றியுள்ளார் ராஜ்கிரண். இளையராஜாவின் தீவிர விசிறியான இவர் தன் படங்கள் அனைத்திலும் இளையராஜா இருக்கும்படி பார்த்துக் கொள்வார்.

இவர் 1991 ஆம் ஆண்டு வெளியான என் ராசாவின் மனசிலே திரைப்படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமானார். தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா இயக்கிய ‘என் ராசாவின் மனசிலே’. உதவி இயக்குனராக இருந்த போது 12 ஆண்டுகளுக்கு முன்னர் தான்  எழுதிய ஒரு கதையை அவர் அப்போது தயாரிப்பாளராகவும் விநியோகஸ்தராகவும் இருந்த ராஜ்கிரணிடம் கூறியுள்ளார். அந்த கதை ராஜ்கிரணுக்கு பிடித்துவிடவும், அதில் இருந்த மாயாண்டி என்ற முரடனின் கதாபாத்திரம் தனக்கு பொருத்தமாக இருக்கும் என முடிவு செய்து தானே நடிக்கவும் முடிவு செய்துள்ளார். இந்த படம் பெரிய வெற்றி பெற்ற நிலையில் தொடர்ந்து நடிகராக அவர் பல படங்களில் நடிக்க தொடங்கினார்.

   

அதன்பின்னர் அவர் நடித்த அரண்மனைக் கிளி மற்றும் எல்லாமே என் ராசாதான் ஆகிய இருபடங்களும் சூப்பர் ஹிட்டாகின. கதாநாயகனாக முதல் மூன்று படங்களையும் சூப்பர் ஹிட்டாக கொடுத்த அவரை வைத்து படம் தயாரிக்க தயாரிப்பாளர்கள் போட்டி போட்டார்கள்.

அப்படிதான் அவரை வைத்து அம்மா கிரியேஷன்ஸ் சிவா அவரை அனுகியுள்ளார். வெளி தயாரிப்பாளர்களுக்கு படம் பண்ணுவதில்லை என ராஜ்கிரண் சொல்லவே, அவரை வழிக்குக் கொண்டுவர அப்பொது ரஜினிகாந்த் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த சூழலில் ஒரு கோடியே பத்து லட்சம் ரூபாய் சம்பளமாக தருகிறேன் எனக் கூறி அவரை நடிக்க சம்மதிக்க வைத்துள்ளார்.

ஆனால் பெரும் பொருட்செலவில் அப்படி உருவாக்கப்பட்ட மாணிக்கம் திரைப்படம் தோல்விப் படமாக அமைந்தது. அதன் பின்னர் ராஜ்கிரண் கதாநாயகனாக வெற்றிப் படமே கொடுக்கவில்லை. பின்னர் இயக்குனர் பாலா இயக்கத்தில் நந்தா திரைப்படத்தில் குணச்சித்திர நடிகராக ரீ எண்ட்ரி கொடுத்தார்.