ரஜினிக்கு ஜோடி 32 வயது நடிகையா? அக்கட தேசத்து பைங்கிளியை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய நெல்சன்..!

By Nanthini on மார்கழி 27, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் இன்றும் சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ரஜினி. இவருடைய நடிப்பில் இறுதியாக வெளியான வேட்டையன் திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாத நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் 2025 ஆம் ஆண்டு வெளியாக உள்ளது. இதனிடையே ரஜினி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் தான் ஜெயிலர். நெல்சன் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் கொடுத்த ஜெயிலர் திரைப்படம் நல்ல வசூலையும் வாரி குவித்தது. இந்த கலெக்ஷனை பட குழுவினருடன் சன் பிக்சர்ஸ் கொண்டாடி மகிழ்ந்தது. ரஜினி உள்ளிட்ட பட குழுவினருக்கு விலை உயர்ந்த கார் உள்ளிட்டவை கொடுக்கப்பட்டது.

Jailer

   

 

   

இந்த படத்தில் ரஜினி தன்னுடைய நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி இருந்தார். ரஜினியுடன் சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ரம்யா கிருஷ்ணன், தமன்னா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு கிடைத்த மிக சிறப்பான வரவேற்பு தொடர்ந்து படத்தின் இரண்டாவது பாகம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இந்த படத்தின் இரண்டாவது பாவத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகளில் நெல்சன் திலீப் குமார் தற்போது ஈடுபட்டு வருவதாகவும் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் படத்தின் சூட்டிங் தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தில் கே ஜி எஃப் நாயகி ஸ்ரீநிதி செட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

 

rajinikanth jailer 2 movie tamil cinema 2

அதனைப் போலவே முதல் பாவத்தில் காவலா பாடல் மூலம் மாஸ் காட்டிய நடிகை தமன்னாவும் ஜெய்லர் இரண்டாம் பாகத்திலும் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. முதல் பாகத்தில் ரஜினியின் ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்த நிலையில் அவர் இரண்டாம் பாகத்தில் இணைவாராய் என்பது கேள்விக்குறியாக தான் உள்ளது. பெரும்பாலும் முதல் பாகத்தில் நடித்த அனைவரும் இரண்டாம் பாகத்திலும் இணைய உள்ளனர். ரஜினி கூலி திரைப்படத்தை முடித்த கையோடு ஜெயிலர் 2 படத்தில் இணைய உள்ள நிலையில் இப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.