Categories: சினிமா

பிரபல இயக்குனரை தன் படத்தில் நடிக்க வைத்து, அவருக்கு குடையும் பிடித்த ரஜினி.. அவர் யார் தெரியுமா..?

Spread the love

தமிழ் திரை உலகில் புரியாத புதிர் என்ற திரைப்படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர்தான் கே எஸ் ரவிக்குமார். ஆனால் இவர் பிரபலமடைந்தது என்னவோ சேரன் பாண்டியன் திரைப்படம் மூலமாக தான். சரத்குமாரை வைத்து பல வெற்றி திரைப்படங்களை கொடுத்த கே.எஸ் ரவிக்குமார் நாட்டாமை என்ற பிரம்மாண்ட திரைப்படத்தையும் கொடுத்திருந்தார். இந்தத் திரைப்படத்தை பார்த்த ரஜினிக்கு கே எஸ் ரவிக்குமாரின் ஸ்டைல் மிகவும் பிடித்துப் போக அவருடைய இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார். அப்படி உருவான திரைப்படம் தான் முத்து. ஒரு மலையாளத் திரைப்படத்தின் கதையை கொஞ்சம் மாற்றி ரஜினிக்கு ஏற்றது போல கே எஸ் ரவிக்குமார் திரைக்கதை அமைத்துள்ளார்.

இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் கொடுத்தது. அதன்பிறகு ரஜினியை வைத்து படையப்பா என்ற திரைப்படத்தை ரவிக்குமார் இயக்கி இருந்தார். அந்த திரைப்படமும் அமோக வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து ரஜினியின் குட் புக்கில் இருக்கும் இயக்குனராக ரவிக்குமார் மாறிவிட்டார். ரஜினியை வைத்து சூப்பர் ஹிட் கொடுத்தாலும் கமலும் ரவிக்குமாரின் இயக்கத்தில் தெனாலி, அவ்வை சண்முகி மற்றும் தசாவதாரம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார்.

இந்த நிலையில் ரஜினியின் முத்து திரைப்படத்தில் கேரள முதலாளியாக ஒரு காட்சியில் கே எஸ் ரவிக்குமார் நடித்திருப்பார். ஆனால் முதலில் அப்படி நடிக்கும் ஐடியாவே அவருக்கு இல்லையா. ரஜினி தான் அவரை வற்புறுத்தி நடிக்க வைத்துள்ளார். மீனா ரஜினியிடம் மலையாளத்தில் ஒன்றை சொல்ல அதற்கு அர்த்தம் புரியாமல் அவரிடம் சென்று ரஜினி சந்தேகம் கேட்பார். அப்போது முத்தம் கொடுத்து இதைத்தான் அந்த பொண்ணு உன்கிட்ட கேட்டா என்று ரவிக்குமார் கூறுவார்.

இந்த காட்சியில் ரவிக்குமார் நடிக்கும் போது அவருக்கு மேக்கப் போடும்போது அவருக்கு கண்ணாடி பிடிப்பது மற்றும் படப்பிடிப்பில் குடை பிடிப்பது என அவர் நடித்து முடிக்கும் வரை அந்த சூழலை மிகவும் இலகுவாக ரஜினி வைத்திருந்தாராம். அதனால் ரவிக்குமார் சிறப்பாக நடித்து முடித்தார். அதனைப் போலவே படையப்பா திரைப்படத்தில் கூட கிக்கு ஏறுதே என்ற பாடலில் ரவிக்குமாரை கடைசி நேரத்தில் ஆட வைத்துள்ளார் ரஜினி. இப்படி சினிமாவில் ஒன்றாக பயணித்த ரஜினி மற்றும் ரவிக்குமார் நட்பு தற்போதும் தொடர்ந்து வருகிறது.

Nanthini

Recent Posts

சிக்கலில் எடப்பாடி பழனிசாமி..? வேட்புமனுவில் சொத்து விவரங்கள் மறைப்பு… 4 வாரத்தில் விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு..!!

கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது, எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது…

36 minutes ago

“எடப்பாடிக்கு ரூ.50,000 கோடி சொத்து” யாரால் வந்தது தெரியுமா..? தேர்தல் முடியட்டும் எல்லாத்தையும் போட்டு உடைக்கிறேன்… பகீர் கிளப்பிய செங்கோட்டையன்..!!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (TVK) சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செங்கோட்டையன், அளுக்குளி எம்.ஜி.ஆர். நகரில்…

41 minutes ago

அதிமுக மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பிரச்சாரத்தில் பணப்பட்டுவாடா…? வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பு..!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சித்துராஜபுரத்தில், அதிமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது…

45 minutes ago

FLASH NEWS: காலையிலேயே விஜய்க்கு செம ஷாக்…. சென்னையில் நள்ளிரவில் பாய்ந்த அதிரடி வழக்கு…!

சென்னையில் தேர்தல் பரப்புரையின் போது விதிகளை மீறியதாகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது காவல்துறை வழக்குப் பதிவு…

49 minutes ago

5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி… காலையில் மகிழ்ச்சி செய்தி… தமிழக மக்களுக்கு குட் நியூஸ்….!

தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று பிற்பகல் 3 மணிக்கு தனது…

53 minutes ago

அரசியல் வட்டாரமே ஷாக்..! NDA கூட்டணி வென்றால் மசூதி, சர்ச் இடிக்கப்படும்… பரபரப்பை கிளப்பிய திருமாவளவன்..!!

கடலூர் மாவட்டத்தின் ஸ்ரீமுஷ்ணம், பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட விசிக தலைவர் திருமாவளவன், திமுக ஆட்சியைத் தொடர…

54 minutes ago