Connect with us

ரஜினி குறித்த கேள்விக்கு பா.  ரஞ்சித் கொடுத்த ரியாக்சன்… கொதித்தெழுந்த தலைவரின் தொண்டர்கள்… ரணகளமான சோசியல் மீடியா…

CINEMA

ரஜினி குறித்த கேள்விக்கு பா.  ரஞ்சித் கொடுத்த ரியாக்சன்… கொதித்தெழுந்த தலைவரின் தொண்டர்கள்… ரணகளமான சோசியல் மீடியா…

தமிழ் சினிமா உலகின் மிகப் பிரபலமான இயக்குனராக வலம் வருபவர் பா ரஞ்சித். இவர் பொதுவாகவே தமிழ் சினிமாவில் காலம் காலமாக ஜாதிக்கு எதிரான கருத்துக்கள் கொண்ட படங்கள் வெளிவந்தாலும்,  அரசியலை தன்னுடைய திரைப்படங்கள் மூலம் சினிமா விவாதங்களாக உருவாக்குபவர் இயக்குனர் பா ரஞ்சித். இவர் 2012 இல் வெளியான ‘அட்டகத்தி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் இயக்குனராக காலடி எடுத்து வைத்தார்.

   

இத்திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் கார்த்தியை வைத்து வடசென்னையை கதைக்களமாகக் கொண்டு ‘மெட்ராஸ்’ என்ற திரைப்படத்தை இயக்கினார். இத்திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது .இதைத் தொடர்ந்து இவர் தமிழில் உச்ச நட்சத்திரமான ரஜினிகாந்தை வைத்து கபாலி, காலா போன்ற திரைப்படங்களை இயக்கினார்.

   

 

 

இதனைத் தொடர்ந்து ஆர்யா நடிப்பில் வெளியான ‘சார்பட்டா பரம்பரை’ படம் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றதும் குறிப்பிடத்தக்கது. இப்படி இவர் இயக்கிய எல்லாம் படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடைந்தது. படங்களை இயக்குவதோடு மட்டுமல்லாமல், தற்பொழுது இவர் படங்களை தயாரித்தும் வருகிறார். இவரது தயாரிப்பில் பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு போன்ற படங்கள் வெளியானது.

இப்படி தயாரிப்பாளராகவும் , இயக்குனராகவும் திரையுலகில் கலக்கி வருகிறார் பா ரஞ்சித். இந்நிலையில் இயக்குனர் பா ரஞ்சித்துக்கு எதிராக ரஜினி ரசிகர்கள் ‘நன்றிகெட்ட ரஞ்சித்’ என்ற ஹேஷ் டேக்கை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். இதற்கு  காரணம் என்னவென்றால், சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இவரிடம், ‘ தலித் அரசியலை உங்கள் படங்களில் ரஜினி வழியாக சொல்லி உள்ளீர்கள். இது ரஜினிக்கு தெரியுமா என்பது தெரியவில்லை.

மற்ற மொழிகளில் இதே போல் பெரிய நடிகரை வைத்து இவ்வாறு படம் எடுக்க முடியாது. மேலும் மலையாள சினிமாவில் பல வருடங்களாக படங்கள் எடுக்கப்பட்டு வந்தாலும் இதுபோன்ற ஒரு படம் கூட வெளியாகவில்லை’ என்று கூறினார். அப்பொழுது ரஜினியை பற்றி பேசிய போது ரஞ்சித் நக்கலாக சிரித்திருந்தார். தற்பொழுது இதனைபார்த்த ரஜினியின் விசுவாசிகள் கொதித்தெழுந்துள்ளனர். இதனால் ட்விட்டர் பக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் பல்வேறு மீம்ஸ்களை கிரியேட் செய்து ட்ரோல் செய்து வறுத்தெடுத்து வருகின்றனர்.

More in CINEMA

To Top