விஜயை முந்த பக்கா ப்ளான் போட்ட ரஜினி.. மாட்டிக்கிட்டு முழிக்கும் கலாநிதி மாறன்..!

Spread the love

தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் தற்போது நடிகர்கள் மத்தியில் யார் அதிக சம்பளம் வாங்குவது என்ற போட்டி அதிகமாக நிலவுகிறது. இறுதியாக தங்கள் நடிப்பில் வெளியான படத்தின் வசூல், தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட நஷ்டம் என எதையும் பார்க்காமல் நடிகர்கள் பெரும்பாலும் தங்களுடைய சம்பளத்தை பற்றி தான் யோசிக்கின்றனர். பல வருடங்கள் கழித்து ஒரு திரைப்படம் இட் கொடுத்து விட்டாலும் உடனே தங்கள் சம்பளத்தை உயர்த்தி விடுகிறார்கள். உதாரணத்திற்கு 40 கோடி சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த சிவகார்த்திகேயன் அமரன் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு தன் சம்பளத்தை 70 கோடியாக உயர்த்தினார்.

அதனைப் போலவே எட்டு கோடி வாங்கிக் கொண்டு மாநாடு திரைப்படத்தில் நடித்த சிம்பு அந்த படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது ஒரு படத்தில் நடிக்க 30 கோடி வரை சம்பளம் கேட்கிறார். 30 கோடி சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த தனுஷ் தொடர்ந்து ஹிட் கொடுத்த நிலையில் தற்போது 50 கோடி சம்பளம் என அடுத்தடுத்த நடிகர்கள் தங்கள் சம்பளத்தை பல மடங்கு உயர்த்தியுள்ளனர். இப்படியான நிலையில் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரித்த அண்ணாத்த திரைப்படத்தில் 120 கோடி ரஜினி சம்பளம் வாங்கி இருந்தார். ஆனால் அந்த திரைப்படம் பெரும் நஷ்டத்தை சந்தித்தது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு மீண்டும் கால் சூட் கொடுத்துள்ளார் ரஜினி. அண்ணாத்த திரைப்படத்தின் நஷ்டத்தை காட்டி சன் பிக்சர்ஸ் 80 கோடி சம்பளம் என்று சொன்னது.

ரஜினியும் அதனை ஏற்றுக்கொண்டு ஜெயிலர் படத்தில் நடித்த நிலையில் அந்த படம் சூப்பர் ஹிட் அடித்ததால் 30 கோடியை ரஜினிக்கு அன்பளிப்பாக கலாநிதிமாறன் வழங்கி இருந்தார். அடுத்து வேட்டையன் படத்திற்காக லைகா நிறுவனத்திடம் 125 கோடி ரஜினி சம்பளம் பேசிய நிலையில் அந்தப் படம் நஷ்டம் அடைந்தது. இது ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் ரஜினி விஜய் தனது போட்டியாக பார்த்து வருகிறாராம். சமீபகாலமாகவே படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா அல்லது ஆடியோ வெளியீட்டு விழாக்களில் ஏதாவது ஒரு கதையை சொல்லி விஜய் ரஜினி தொடர்ந்து வம்பு இழுத்து வருகிறார்.

இதனிடையே சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கூலி திரைப்படத்தில் நடிப்பதற்காக ரஜினி 150 கோடி சம்பளம் வாங்கினார் என்று கூறப்படுகிறது. அடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வரும் நிலையில் இந்த படம் தொடங்கிய போது வெறும் 25 கோடி அட்வான்ஸ் வாங்கிய ரஜினி தற்போது 250 கோடி சம்பளம் கேட்கிறாரா. அதற்கு காரணம் ஜெயிலர் திரைப்படம் 500 கோடி வசூலை தாண்டியதுதான். படம் வெளியாவதற்கு முன்பே கூடி திரைப்படம் 500 கோடி லாபம் பார்த்து உள்ளது. அதுமட்டுமல்லாமல் ஜனநாயகன்படத்தில் நடிக்க விஜய் 225 கோடி சம்பளம் வாங்கிய நிலையில் அவரை விட அதிகம் வாங்க வேண்டும் என்று யோசித்த ரஜினி 250 கோடி சம்பளம் கேட்டுள்ள நிலையில் இதனை கேட்ட கலாநிதி மாறன் அதிர்ச்சியில் உள்ளாராம்.

Nanthini

Recent Posts

“கல்யாணம் பண்ணிக்கிறேன்”…. ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய ஆண் காவலர்… கதறிய பெண் போலீஸ்… சென்னையில் பரபரப்பு….!

சென்னை ஆயுதப்படை பிரிவில் காவலராகப் பணியாற்றி வரும் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது இளம் பெண் ஒருவர், சென்னை…

8 minutes ago

“ஐயோ கடவுளே இப்படியா ஆகணும்…?” தோட்டத்தில் வேலை பார்த்த 16 வயது சிறுவன்…” நொடிப்பொழுதில் அரங்கேறிய பயங்கரம்…. கதறும் குடும்பத்தினர்…!!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஈஸ்வரமூர்த்தி என்பவரது தோட்டத்தில், 16 வயதே ஆன மனோஜ் என்ற சிறுவன் வேலை…

13 minutes ago

திமுக முன்னாள் அமைச்சருக்கு ஸ்கெட்ச்?… மாட்டிய அன்பில் மகேஸ்…. சிக்கிய 49 வங்கி கணக்குகள்… காவல் துறை வெளியிட்ட பகீர் தகவல்….!

முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ்…

14 minutes ago

அடித்து ஆடும் முதல்வர் விஜய்…. “இதுதான் அந்த 2வது ஃபைலா?” அப்போ கேஎன் நேரு.. இப்போ அன்பில் மகேஷ்….. அடுத்தடுத்து அதிரும் அரசியல் களம்….!

திருச்சியில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் இல்லத்தில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் இன்று காலை 7 மணி முதல்…

19 minutes ago

“சினிமா பாணியில் ருத்திரதாண்டவம்…” கையில் கோடரியுடன் கலெக்டர் ஆபீசுக்கு வந்த நபர்… பதறிய அதிகாரிகள்…. சோஷியல் மீடியாவில் தீயாய் பரவும் வீடியோ…!!

உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள், ஒல்லியான தோற்றம் கொண்ட நபர்…

24 minutes ago

ரூ. 100 கோடி லஞ்சப் புகார்…. தனியார் பள்ளி அனுமதி வழக்கில் சிக்கும் அன்பில் மகேஷ்?… கோபத்தின் உச்சிக்கே சென்ற ஸ்டாலின்…. பரபரக்கும் அரசியல் களம்….!

முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்குச் சொந்தமான மற்றும் தொடர்புடைய இடங்களில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் இன்று…

24 minutes ago