Categories: அரசியல்

திமுக முன்னாள் அமைச்சருக்கு ஸ்கெட்ச்?… மாட்டிய அன்பில் மகேஸ்…. சிக்கிய 49 வங்கி கணக்குகள்… காவல் துறை வெளியிட்ட பகீர் தகவல்….!

Spread the love

முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவருக்குச் சொந்தமான இடங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். தனியார் பள்ளிகளுக்கு அரசு அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னை மற்றும் திருச்சியில் உள்ள அவரது இல்லங்கள் மற்றும் அவரது உதவியாளர் வாலாடி கார்த்திக்கிற்கு சொந்தமான இடங்கள் உட்பட மொத்தம் 6 இடங்களில் இச்சோதனை நடைபெற்று வருகிறது.

தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் செயலாளர் இளங்கோவன் அளித்த புகாரின் பேரில், முதன்முதலில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், தர உயர்வு மற்றும் DTCP அனுமதி போன்ற அரசு சான்றிதழ்களைப் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் வசூலித்து மோசடி செய்ததாக பி.டி. அரசகுமார் என்பவர் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். இவரைத் தொடர்ந்து, இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் இருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.

இவ்வழக்கு தொடர்பாக இதுவரை 250-க்கும் மேற்பட்டோரிடமும், பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளிடமும் விரிவான விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இதுவரை நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், சுமார் 177 தனியார் பள்ளிகளிடம் இருந்து பல கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டு நிதி மோசடி செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் 49-க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டு, DPI வளாகம் உள்ளிட்ட பல இடங்களில் இருந்து முக்கிய ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் சான்றுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட மின்னணு ஆதாரங்கள், அரசு ஆவணங்கள் மற்றும் சாட்சிகளின் வாக்குமூலங்களின் அடிப்படையில், அப்போதைய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு இந்த மோசடியில் நேரடித் தொடர்பு இருப்பதும், அவர் ஊழல் மற்றும் நம்பிக்கை மோசடியில் ஈடுபட்டதும் உறுதியாகியுள்ளது. இதன் பேரிலேயே அவர் மீது ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினரால் இந்தத் தீவிர சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Nanthini

Recent Posts

“நள்ளிரவில் அலறிய பெண்கள்…” போதையில் அத்துமீறிய வாலிபரை கட்டி வைத்து அடித்த உறவினர்கள்… அடுத்து நடந்த பரபரப்பு சம்பவம்…!!

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் மதுபோதையில் வீட்டிற்குள் புகுந்து பெண்களிடம் தவறாக நடக்க முயன்ற 25 வயது இளைஞரை, பெண்களின் உறவினர்கள்…

4 minutes ago

விளையாட்டு வினையானதா?… Free Fire விளையாட்டால் விபரீதம்?… 2 சிறுவர்கள் கொடூரமாக குத்தி கொலை… பதறவைக்கும் சம்பவம்…!!

குஜராத் மாநிலம் சூரத் நகரில் அஜ்மல் மற்றும் ஃபைசான் என்ற இரு சிறுவர்கள் கத்தியால் தாக்கப்பட்டு உயிரிழந்த துயர சம்பவம்…

43 minutes ago

அங்க ஏதோ இருக்கு..! புதருக்குள் அசைந்த மர்ம உருவம்… கிராம மக்கள் திரண்டதால் பரபரப்பு… இறுதியில் என்னாச்சு தெரியுமா?…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்திலுள்ள ஜலால்பூர் சோயா கிராமத்து வயல்வெளியில், கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை நாணல் புதர்களுக்கு நடுவே…

51 minutes ago

“உடனடி விசாரணை வேண்டும்!”… சிறுமி மரணத்தில் களமிறங்கிய பீம் சேனா… ஆதாரங்கள் அழிக்கப்படுகிறதா… கிளம்பும் புது சர்ச்சை…!!

உத்தரப் பிரதேசத்தின் ஃபிரோசாபாத் தர்காபூர் பகுதியில் சிறுமி நிஷா கதேரியாவுக்கு நேர்ந்துள்ள கொடூர மரணம் கடும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.…

1 மணத்தியாலம் ago

ஐயோ சந்நிதியிலேயே இப்படியா?… கேமராவில் சிக்கிய அசிங்கம்… புனித தலத்தில் இவ்வளவு துணிச்சலா… பக்தர்கள் கொந்தளிப்பு…!!

ராஜஸ்தானின் ஜலோர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சுந்தா மாதா மலைக் கோயில் வளாகத்தில், பெண் பக்தர்களிடம் சிலர் தகாத முறையில்…

1 மணத்தியாலம் ago