Categories: சினிமா

இந்த வீடியோவை லாரன்ஸ் சார் கிட்ட காட்டுவீங்களா..? நேரில் அழைத்து சிறுமிக்கு மிகப்பெரிய உதவி செய்த மாஸ்டர்.. இந்த மனசு யாருக்கு வரும்..!

Spread the love

சரியாக நடக்க முடியாத சிறுமி உதவி கேட்ட உடன் ராகவா லாரன்ஸ் மாஸ்டர் உதவி செய்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி இருக்கிறது.

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ராகவா லாரன்ஸ். நடன இயக்குனராக தனது வாழ்க்கை பயணத்தை தொடங்கிய இவர் 2002 ஆம் ஆண்டு வெளியான அற்புதம் என்ற திரைப்படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானார். அதை தொடர்ந்து தெலுங்கில் மாஸ் என்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்தார்.

தொடர்ந்து நடிப்பிலும் இயக்கத்திலும் கவனம் செலுத்தி வந்தார் ராகவா லாரன்ஸ். 2007 ஆம் ஆண்டு முனி என்ற திரைப்படத்தை இயக்கி சிறந்த நடிகராகவும் இயக்குனராகவும் வலம் வந்தார். ஹாரர் திரைப்படமாக உருவான இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை கொடுக்க காஞ்சனா என்ற பெயரில் அடுத்தடுத்து சீரிஸ்களை எடுத்து வருகின்றார். அது மட்டும் இல்லாமல் ராஜாதிராஜா, இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், ஜிகர்தண்டா டுப்லெஸ் உள்ள திரைப்படங்களிலும் நடித்திருக்கின்றார்.

தனது நடிப்பால் புகழின் உச்சிக்கு சென்றாரோ இல்லையோ தனது உதவும் குணத்தால் மிகப்பெரிய நடிகராக உயர்ந்திருக்கின்றார். கடந்த மே ஒன்றாம் தேதி முதல் மாற்றம் என்கின்ற அறக்கட்டளையை தொடங்கி இவர் பல மக்களுக்கு உதவி செய்து வருகின்றார். மேலும் இந்த அறக்கட்டளையில் எஸ்ஜே சூர்யா, கேபிஒய் பாலா, அறந்தாங்கி நிஷா உள்ளிட்ட பல பிரபலங்களும் கலந்து கொண்டு பலருக்கும் உதவி செய்து வருகிறார்கள்.

முதல் கட்டமாக 10 டிராக்டர்களை 10 ஊர்களுக்கு வழங்கி இருக்கும் ராகவா லாரன்ஸ் பலருக்கும் உதவி செய்து வருகின்றார். இந்நிலையில் தற்போது ஒரு வீடியோ வைரலாகி வந்தது. அந்த வீடியோவில் ஒரு பள்ளி குழந்தை சரியாக நடக்க முடியாமல் கஷ்டப்படுகிறார். அவர் அந்த வீடியோவில் இதனை ராகவா லாரன்ஸ் மாஸ்டர் இடம் போட்டு காட்டுங்கள் என்று கூறுகிறார்.

உடனே ராகவா லாரன்ஸ் மாஸ்டர் அந்த குழந்தையை அழைத்து அவர் நடக்க மிகவும் சிரமப்படுவதால் அவரின் அம்மாவுக்கு புது இரு சக்கர வாகனம் ஒன்றை வாங்கி பரிசாக அளிக்கின்றார். இனி நீங்கள் நடந்து போக வேண்டாம் அம்மாவுடன் இந்த வாகனத்தில் ஜாலியாக செல்லலாம் என்று கூறுகிறார். மேலும் உங்கள் காலை சரி செய்வதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதை நான் கட்டாயம் செய்வேன் என்று கூறுகிறார். இந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Mahalakshmi

Recent Posts

பார்த்தாலே பதறுதே..! தன்னை கடித்த பாம்பை பிடித்துக்கொண்டு ஹாஸ்பிடலுக்கு சென்ற நபர்… தைரியத்தை பாராட்டு இணையவாசிகள்…!!

உத்தரபிரதேசத்தின் பிஜ்னோரில் பாம்பு கடித்த ஒருவர், உயிருள்ள பாம்பைப் பிடித்து, சீக்கிரம்  அடையாளம் காண மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று, தனது…

29 minutes ago

ஷாக்.! திடீரென தீப்பிடித்த ஆம்புலன்ஸ்… புதிதாக பிறந்த குழந்தை, மருத்துவர் உட்பட 2 பேர் பலி… குஜராத்தில் பயங்கர அதிர்ச்சி..!!

குஜராத்தின் அர்வல்லி மாவட்டத்தில் உள்ள மொடசா நகரம் அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலையில் ஆம்புலன்ஸ் தீப்பிடித்து எரிந்ததில், புதிதாகப் பிறந்த குழந்தை,…

35 minutes ago

சூப்பரோ சூப்பர்..! “நலன் காக்கும் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் சமையல் போட்டி.. பெண்களே வீடியோ எடுத்து உடனே அனுப்புங்க… வெளியானது அறிவிப்பு…!

நலன் காக்கும் ஸ்டாலின்" திட்டம் என்பது, தமிழ்நாட்டில் உள்ள ஏழை மற்றும் பின்தங்கிய மக்களுக்கு அவர்களின் வசிப்பிடங்களுக்கு அருகிலேயே இலவச…

43 minutes ago

BREAKING: தினேஷ் கார்த்திக் வீட்டின் அருகே ஆண் சடலம்…. பெரும் பரபரப்பு…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்கின் வீட்டின் அருகே சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

45 minutes ago

மகளை கல்லூரிக்கு அழைத்துச் சென்ற தந்தை… எதிரே எமனாக வந்த லாரி… நொடி பொழுதில் தலை நசுங்கி துடிதுடித்து… பெரும் சோக சம்பவம்…!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள துத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன்(42) என்பவருடைய மகள் சூரிய பிரியா (17). இவர்…

54 minutes ago

BREAKING: மீண்டும் புயல் சின்னம்… தமிழகத்தில் வெளுத்து வாங்கும் கனமழை…. வந்தது அலெர்ட்…!

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதனிடையே வங்க…

1 மணி நேரம் ago