#image_title
நடிகர் விஜயகாந்த் உடல் நலக்குறைவால் கடந்த 28ம் தேதி சென்னையில் காலமானார். அவரது மறைவு தமிழ் சினிமாத்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கேப்டன் ரசிகர்களும், தேமுதிக தொண்டர்களும் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். அவரது இறுதி ஊர்வலத்தில் பல லட்சம் மக்கள் பங்கேற்றனர். விஜயகாந்தின் சினிமாத்துறை நண்பர்களில் மிக நெருக்கமானவர் ராதாரவி. கேப்டனின் ஆரம்ப கால படங்களில், வில்லன் கேரக்டரில் பெரும்பாலும் ராதாரவிதான் நடித்திருப்பார். ரஜினிக்கு ஒரு ரகுவரன், கமலுக்கு ஒரு நாசர் போல, ஒரு காலகட்டத்தில் விஜயகாந்துக்கு வில்லன் என்றால் அது ராதாரவிதான்.
ஒரு கட்டத்துக்கு பிறகு குணசித்திர கேரக்டரில் ராதாரவி நடிக்க ஆரம்பித்த பிறகு, வில்லன் கேரக்டர்கள் குறைந்து போனது என்றாலும் விஜயகாந்தும், ராதாரவியும் எப்போதுமே நெருங்கிய நண்பர்களாக தான் இருந்து வந்திருக்கின்றனர். விஜயகாந்த் மறைவு குறித்தும், அவருடன் தனது நட்பு குறித்தும் நடிகர் ராதாரவி, சமீபத்திய நேர்காணலில் நிறைய விஷயங்களில் பேசி இருந்தார். அதில் பல விஷயங்களை அவர் ரசிகர்களுடன் பகிர்ந்துக் கொண்டு இருக்கிறார். அதில் ராதாரவி கூறியதாவது, நானும் விஜயகாந்தும், நிறைய படங்களில் ஒன்றாக நடித்தோம். ஒரு சீசன் போல அந்த காலகட்டம் எங்களுக்கு அமைந்தது.
கருத்துவேறுபாடுகள்தான் ஒரு நட்பு பிரிய காரணம் என்றால், எங்களுக்கு அப்படி ஒரு கருத்துவேறுபாடு வந்ததே இல்லை. என்னை காண நான் நடிக்கும் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு விஜயகாந்த் வருவார். அவர் நடிக்கும் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு நான் போவேன். இது வழக்கமாக நடந்த விஷயம்தான். இன்னர் குவாலிட்டீஸ் என்று சில குணங்கள் உண்டு. அதாவது அவரவர்க்கு என சில குணங்கள் உண்டு. ஒருவரை நான் கண்டபடி திட்டுவேன், ஆனால் அவர்களிடம் அன்பு காட்டுவேன். அது என்னுடைய இன்னர் குவாலிட்டீஸ். அதுபோல் மற்றவர்களுக்கு உதவுவதுதான் விஜயகாந்தின் இன்னர் குவாலிட்டீஸ் ஆக இருந்தது.
அதை மற்றவர்கள் நிறுத்தக் கூடாது. விஜயகாந்த் உடல் நலம் குணமடைந்து சமீபத்தில், வீட்டுக்கு வந்த போது அவரை காண வேண்டும் என்று கூறினீர்களே, வீட்டுக்கு வந்து அவரை பாருங்க என கூறுவதற்காக பிரேமலதா என்னை அழைத்திருக்கிறார். ஆனால் நான் அந்த போனை எடுக்காமல் தப்பு செய்துவிட்டேன். அப்படி எடுத்திருந்தால், கடைசியாக ஒருமுறை விஜயகாந்தை உயிருடன் பார்த்திருப்பேன். அந்த வாய்ப்பை இழந்துவிட்டேன் என்று அந்த நேர்காணலில் வருத்தப்பட்டிருக்கிறார் நடிகர் ராதாரவி.
ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…
டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…
இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…
சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…
திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…